ரோட்டில் ரொட்டி விற்ற பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Report Print Deepthi Deepthi in பெண்கள்

மேற்கு ஆஃப்ரிக்காவின் லாகோஸில் ரொட்டி விற்ற Olajumoke Orisaguna தற்போது நட்சத்திர நடிகையாக உருவெடுத்துள்ளார்.

நைஜீரியாவின் சிண்ட்ரெல்லாவாக வர்ணக்கப்படுகிறார்.

ரொட்டி விற்பனை செய்த இவர் ஒரே ஆண்டில் தேசிய அளவில் பிரபலமாகியுள்ளார்.

நைஜீரியாவின் Osun மாநிலத்தில் 1989 ஆம் ஆண்டு பிறந்த இவர் 2010 ஆம் ஆண்டு Orisaguna என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஆரம்பத்தில் சிகையலங்கார வேலை செய்து வந்த இவருக்கு அதிலிருந்து போதிய வருமானம் கிடைக்காத காரணத்தால் அந்த தொழிலை விட்டுவிட்டு, ரொட்டி தயாரித்து விற்கும் தொழிலை செய்ய ஆரம்பித்தார்.

தான் தயாரிக்கும் ரொட்டிகளை தலையில் வைத்துக்கொண்டு சாலைகளில் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயினை வைத்து இவரும், இவரது கணவரும் குடும்பத்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தெருவில் வைத்து இவரை ஒரு புகைப்படக்காரர் எடுத்த புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் பெற்றது. அதன் பின்னர் நாளிதழ் ஒன்றின் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்தார்.

அதன் மூலம் பிரபலமாகி தற்போது 5 மொடல் நிறுவனங்கள இவரை ஒப்பந்தம் செய்துள்ளன,

டினி டெம்பா என்பவரின் புகைப்பட படப்பிடிப்பு அவரது வாழ்க்கையை மாற்றியது. இதுகுறித்து அவர் கூறியதாவது, முதலில் எனக்கு கடினமாக இருந்தது, எவ்வாறு போஸ் கொடுப்பது, ஒப்பனை செய்வது, உடையணிவது என்பது இப்போது கற்றுக்கொண்டேன்.

தற்போது நான் பிரபலமடைந்துவிட்டாலும், சமூக வலைதளங்களில் வெளியான சில கருத்துக்கள் என்னை புண்படுத்தியது, ஆத்திரத்தை உண்டாக்கியது, பேக்கரியில் எனது கடந்த கால வாழ்க்கையில் இருந்தததை நான் இழக்கவில்லை. ஆனால், என்னுடன் வியாபாரம் செய்த சில நண்பர்களை இழந்துள்ளேன்.

நாங்கள் தொடர்பில் இருக்கிறோம், அவர்களை என்னால் மறக்க இயலாது என்று கூறியுள்ளார்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்