மாதவிலக்கின் போது! இதை மட்டும் அலட்சியப்படுத்த வேண்டாம்

Report Print Printha in பெண்கள்

மாதவிலக்கு நெருங்கும் சில நாட்களுக்கு முன்பில் இருந்து வயிறு, இடுப்பு, தொடைகள் மற்றும் மார்பகம் போன்ற இடங்களில் வலி இருப்பதை போன்ற உணர்வுகள் சில பெண்களுக்கு இருக்கும்.

இந்த அறிகுறிகளுக்கு premenstrual syndrome மற்றும் புரோஜெஸ்ட்ரோன், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களே முக்கிய காரணம்.

இது போன்ற அறிகுறிகள் தானாகவே சரியாகி விடும். ஆனால் அதற்காக இப்படி தோன்றும் அனைத்து அறிகுறிகளையுமே சாதாரணமாக நினைத்து அலட்சியப்படுத்தக் கூடாது.

எந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது?
  • மார்பகத்தில் அல்லது அக்குள் பகுதியில் அசாதாரணமான கட்டி, வீக்கம், வலி போன்றவை தென்பட்டால் அல்லது மார்பகங்களில் இருந்து திரவம், ரத்தம் கசிந்தால்,
  • ஒருவித அசௌகரியத்தின் மூலம் தூக்கம் கெட்டுப்போகும் அளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டால்,
  • மாதவிலக்கு முடிந்த பிறகும் இந்த அறிகுறிகள் தொடர்ந்தால்,
  • மார்பகங்களின் வடிவத்தில் மாற்றங்களை உணர்ந்தால்,
  • மார்பகத்தின் சருமமானது சிவந்து போவது, அரிப்பது, குழிகள் விழுந்து காணப்படுவது,

இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மகளிர் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

தவிர்க்க வேண்டியவை?
  • கொழுப்பு அதிகமான உணவுகளைத் தவிர்த்து, குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
  • காபைன் உள்ள காபி, டீ, கோலா, சாக்லேட் போன்ற அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
  • மாதவிலக்கு தொடங்கும் ஒரு வாரத்திற்கு முன்பே உணவில் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • மார்பகங்களுக்கு தொந்தரவு இல்லாத வசதியான உள்ளாடைகளை அணிய வேண்டும்.
சாப்பிட வேண்டிய உணவுகள்?

வேர்க்கடலை, பசலைக்கீரை, ஆலிவ், சோளம், கேரட், வாழைப்பழம் மற்றும் பழுப்பு அரிசி போன்ற அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிட வேண்டும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்