பிறப்புறுப்பு சிதைவிலிருந்து தப்பிய பெண்ணின் உண்மை கதை

Report Print Deepthi Deepthi in பெண்கள்

பெண் உறுப்பு சிதைவு என்பதை பெண்கள் பருவம் அடையும் முன்பே செய்துவிட வேண்டும் என்பது தென்னாப்பிரிக்க நாடுகளில் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது

அதாவது ஐந்து வயது முதல் ஏழுவயதிற்குள் இந்த சடங்கை முடித்துவிட வேண்டும். ஓடி விளையாடும் சிறுமியை பிடித்துவந்து வலுக்கட்டாயமாக இந்த செயலை அரகேற்றியபின் தான் அவள் துாய்மையடைந்துவிட்டாள் என்று அந்த சிறுமியின் தாய் பெருமை பேசுவார். பெண்ணின் பிறப்புறுப்பில் இருக்கும் “க்ளிட்டோரியஸ்” என்ற பகுதிதான் பெண்ணிற்கான உணர்ச்சி கூறுகள்.

பெண்ணின் பாலுணர்வு ரீதியான உந்துதலுக்கு இதுதான் முதல் காரணமாக இருக்கின்றது. இதை அறுத்து விட்டால் அந்த பெண்ணிற்கு பாலுணர்வு குன்றிவிடும் என்ற கருத்துதான் இந்த வன்கொடுமைக்கு அடிப்படையாக இருந்துவருகிறது.

இதுபோன்ற மதச்சடங்குகளால் வலியை தாங்கி கொள்ள முடியாத பெண்கள் உயிரிழந்துவிடுகின்றனர். மேலும் தென்னாப்பிரிக்க நாட்டின் கிராமப்புறங்களில் பெண்களை இதுபோன்ற சடங்குகளால் சீரழிப்பதோடு மட்டுமல்லாமல், இளம் வயதில் திருமணம், கல்விக்கு தடை போன்றவை இன்றுவரை நிலவி வருகின்றன.

ஐ.நா. சபை பெண்களுக்கு எதிரான இந்த வன்கொடுமையை முற்றிலும் தடைசெய்யும் நோக்கில், ஆப்ரிக்க நாடுகளுக்கு பல முறை அழுத்தம் கொடுத்துவிட்டன.

சமூக மாற்றமும், பெண் கல்வியும் இந்த முறைக்கு எதிரான மனோபாவங்களை ஏற்படுத்தி இருந்தாலும், பழங்குடி மக்களிடையே இருக்கும் இந்த பழக்கத்தை இதுவரை முற்றிலும் தடைசெய்யமுடியவில்லை என்று ஐ.நா சபையே ஒப்புக்கொண்டுள்ளது.

சாதனை படைத்த பெண் குரியா

கென்யாவை சேர்ந்த குரியா என்பவர் இந்த சடங்கில் இருந்து தப்பித்து, இன்று நல்ல கல்வியறிவுடன் சிறு பள்ளிக்கூடம் ஒன்றை தனது கிராமத்தில் தொடங்கி, சிறுவர்களுக்கு பாடம் நடத்திக்கொடுக்கிறார்.

இதுகுறித்து அவர் பகிர்ந்துகொண்டதாவது, எனக்கு 8 வயது இருக்கும்போது இந்த சடங்கினை செய்வதற்கு அனைவரும் ஆயத்தமானார்கள். அப்போது, எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. ஒரு சிலரது வீட்டில் ஆடு வெட்டி விருந்து வைத்து திருவிழாவாக கொண்டாடுவார்கள்.

இப்படி, நம்மை சுற்றியிருப்பவர்கள் கொண்டாட்டத்தில் இருக்க, என்னை போன்ற சிறுமிகளை மட்டும் ஒரு இருட்டிய உலகத்திற்குள் அழைத்து செல்வார்கள், இந்த சடங்கிற்காக அதிகாலை 3 மணிக்கு எங்களை ஆற்றிற்கு அழைத்து சென்றுவிடுவார்கள்.

குளிர் நீரில் எங்களை குளிப்பாட்டி அழைத்து சென்று சடங்குகளை மேற்கொள்வார்கள். இதுபோன்ற சடங்கினால், அதிக ரத்தம் வெளியாகி சிறுமிகள் இறந்துபோனார்கள், ஒரு சிலர், 15 வயதில் குழந்தை பெற்றுகொள்ளும்போது இதன் தாக்கத்தால் இறந்துபோனார்கள்.

ஆனால், இதுபோன்ற நரகம் எனது வாழ்க்கையில் வந்துவிடக்கூடாது என்பதில் எனது பெற்றோரும் உதவி செய்தனர். எனது கிராமத்தில் இருந்து பல்கலைக்கழகத்தில் படித்த முதல் மாணவி நான் தான். பல்கலைக்கழக படிப்பால் எனது வாழ்க்கையில் புது மாற்றம் ஏற்பட்டது.

எனது கல்லூரி படிப்பை நிறைவு செய்த பின்னர், கிராமத்திற்கே திரும்பி வந்துவிட்டேன். இங்கு பெண்கள் பள்ளிக்கு செல்வதென்றால் தொலைதூரம் செல்ல வேண்டும். இதனால் அவர்களது படிப்பு பாதியில் நிறுத்தப்படுகிறது.

எனவே, எனது கிராமத்தில் இருக்கும் பெண்களின் படிப்புக்காகவும், பெண் பிறப்புறுப்பு சிதைவை நிறுத்தவேண்டு எனவும் முடிவு செய்தேன். அதனடிப்படையில், அமைப்பு ஒன்றை உருவாக்கி, இளம்வயது திருமணம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்பி வருகிறேன்.

மேலும், இளம் வயதினர் கல்வியறிவை வளர்த்துக்கொள்வதற்காக எனது கிராமத்தில் நூலகம் ஒன்றை அமைத்துள்ளேன், அந்த நூலகத்திற்கு 500 குழந்தைகள் வருகின்றனர். ஆனால் 50 இருக்கைகள் மற்றும் 5 கணணிகள் இருக்கின்றன.

இதுவே, பெருமையான ஒன்றாகும். எங்கள் கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களும் ஒன்று சேர்ந்து பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கு குரல் கொடுக்க வேண்டும், அது குறித்து கேள்விகளை எழுப்பி, அப்படியொரு மதசடங்கினை தடை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்