மாதவிடாய் காலத்தில் அடிவயிற்று வலியா? எளிய மருத்துவம்

Report Print Kavitha in பெண்கள்
496Shares
496Shares
ibctamil.com

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அடிவயிறு வலி அதிகமாக இருக்கும், இதற்கு கர்ப்பப்பையை சுற்றியுள்ள தசை இறுக்கமே காரணம்.

சில சமயங்களில் முதுகு வலி, இடுப்பு வலி, தலை வலி, மன உளைச்சல், சோர்வு, உடல் வலி என மாதவிடாய் காலத்தில் அதிக வலியை ஏற்படுத்திவிடுகின்றது.

மாத விடாய் சமயங்களில் வயிறு வலியை போக்க எளிய முறைகளை கையாளுவோம்.

  • வெந்தயத்தை முன் தின இரவு ஊற வைத்து, அந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் வலி கட்டுப்படும். இறுக்கமடைந்த தசைகள் தளர்வாகும்.
  • தேநீர் தயாரிக்கும் போது, அதில் இஞ்சியை தட்டி போட்டு கொதிக்கவிடவும், அதன் பின் வடிகட்டியவுடன் அதில் மிளகுப் பொடியை கலந்து குடித்தால் புத்துணர்வாகவும் வலி மறைந்தும் போய்விடும்.
  • சூடான நீரில் ஒத்தடம் வயிற்றுப் பகுதிகளில் கொடுத்தால் இறுக்கமடைந்த தசைகள் தளர்வாகும், இதமாகவும் இருக்கும்.
  • இது வயிறு மற்றும் இடுப்பு வலிக்கு நல்ல தீர்வை தடும், நல்லெண்ணெயை சூடுபடுத்தி அடிவயிற்றில் தேய்த்தால் கர்ப்பப்பையை சுற்றி இருக்கும் சூடு குறைந்து குளிர்ச்சியாகும், இதனால் வலி குணமாகும்.
  • சீரகத்தை நீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க விடுங்கள், ஆறியது வடிகட்டி குடித்தால், வயிற்றில் உண்டாகும் பாதிப்புகள் குணமாகி இதம் பெறும்.
  • சீமை சாமந்தி வலி நிவாரணியாக செயல்படுகிறது, அதிலிருக்கும் காரணிகள் கர்ப்பப்பை தளர்வடையச் செய்து புரோஸ்டா கிளாண்டின் சுரப்பை குறைக்கிறது, இதனால் வலியும் குறைந்துவிடும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்