மகளிர் தினத்தை முன்னிட்டு முழுக்க பெண்களை கொண்டு இயங்கிய விமானம்

Report Print Kabilan in பெண்கள்

இந்தியாவில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஏர் இந்தியா விமானம் முழுக்கப் பெண்களைக் கொண்டு இயக்கப்பட்டது.

சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்படுவது வழக்கம். இம்முறை, மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு சேவையாக, ஏர் இந்தியா விமான நிறுவனம் ஒரு விடயத்தை செய்துள்ளது.

அதாவது, கொல்கத்தாவில் இருந்து திமாபூர் வரை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில், விமானி முதல் சிப்பந்திகள் வரை அனைத்துப் பணிகளிலும் பெண்களைக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவின் பொது மேலாளர் நவ்நீத் சித்து, கொடியசைத்து இந்தச் சிறப்புச் சேவையை தொடங்கி வைத்தார். மேலும், இந்த வாரம் முழுவதும் மகளிர் தினத்தை முன்னிட்டு, பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை ஏர் இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இதற்கு முன்பு, உலகிலேயே முதன் முறையாக கடந்த 1985ஆம் ஆண்டு, பெண்களைக் கொண்டு ஏர் இந்தியா நிறுவனம் விமானத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers