பெண்களுக்கான அவசியமான பதிவு- கட்டாயம் படிக்கவும்

Report Print Kavitha in பெண்கள்

தற்போதைய பெண்கள் சுடிதாரை விட அதிகமாக விரும்பி அணியும் ஆடைகளில் ஒன்று தான் லெக்கிங்ஸ்.

ஏனெனில் அனைத்து வண்ணங்களிலும் கிடைக்கும் லெக்கின்ஸ் பெண்களுக்கு மிக வசதியான உடையாகவும், அழகாக காட்டும் உடையாகவும் உள்ளது.

இதனால் உடல் நலப் பிரச்சனைகள் உண்டாகும் என்பது உங்களுக்கு தெரியுமா?

லெக்கிங்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகள் சரும வறட்சியை உண்டாக்குகின்றன, இது சருமத்துளைகளில் உள்ள அழுக்கை வியர்வை மூலம் வெளியேற அனுமதிப்பதில்லை.

இதனால் உடலில் வெப்பம் அதிகரித்து பக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் உண்டாகின்றன, படர்தாமரையும் உருவாகிறது.

அதுமட்டுமின்றி உடற்பயிற்சி செய்யும் போது இறுக்கமான ஆடைகளை அணிவதால் அதிகமான வியர்வை தேங்கி பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது.

மேலும் லெக்கிங்ஸ் இறுக்கமாக இருப்பதால் உடலில் இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது, உடல் எடையை அதிகரிப்பதுடன், சதைகள் இறுக்கமாகி அசிங்கமான தோற்றத்தையும் கொடுக்கிறது.

இறந்த செல்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், வலியை உண்டாக்கும் சிவப்பு புண்களையும் ஏற்படுத்துகிறது.

முக்கியமாக கோடை காலங்களில் பெண்கள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் உடுத்துவதை தவிர்க்க வேண்டும்.

அப்படியே அணிந்தாலும் லெக்கிங்ஸை கழற்றியவுடன் சுத்தமான நீரில் குளிப்பது அவசியமாகிறது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers