மார்பகங்களுக்கு அடியில் வரும் அலர்ஜிகள் மற்றும் தீர்வுகள்

Report Print Trinity in பெண்கள்

மார்பகங்களின் அடியில் தோல் சிவந்து அரிப்பு எரிச்சல் தோல் நமைச்சல்கள் பல பேருக்கு ஏற்படும் . இதனை 'இன்டர் ட்ரை கோ' என்று அழைக்ககின்றனர். இதன் மூலம் வீக்கம், எரிச்சல், அரிப்பு, தோல் சிவத்தல் மற்றும் தோல் வறண்டு போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இதனால் பெண்கள் பலர் அசௌகர்யத்தையும் கூச்சத்தையும் அடைகின்றனர். தங்கள் மார்பகங்ககளின் கீழ் இவ்வாறு இருப்பதால் தாம்பத்யத்தில் இவர்களின் ஈடுபாட்டை விட பயமே மேலோங்கி இருக்கிறது.

மிக எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே இந்த ஒவ்வாமையை நீக்கி விட முடியும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

பல வியாதிகளுக்கு அருமருந்தாக இருக்கும் ஆப்பிள் சீடர் வினீகர் மார்பக அலர்ஜிகளுக்கும் மருந்தாக செயல்படுகிறது. பாக்டீரியா தொற்று மற்றும் பூஞ்சை தொற்று நோய்களை குணப்படுத்தும் மூலப் பொருட்கள் இதில் அதிகமாக உள்ளது. மைக்ரோப் போன்ற நுண்ணுயிரிகளால் ஏற்படும் பாதிப்பை மட்டுமல்லாது கெமிக்கல் அலர்ஜியால் ஏற்படும் பாதிப்புகளையும் புண்களையும் அறவே சரி செய்கிறது. சரும அல்கலைன்களை அதிகப்படுத்தி தோலின் பிஎச் அளவை சமமாக வைப்பதில் ஆப்பிள் சீடர் உறுதுணை புரிகிறது.

ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கப் நீரில் கலந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருமுறை தடவி வந்தால் அலர்ஜிகள் விரைவில் குணமாகும்.

டீ ட்ரீ எண்ணெய்

இந்த டீ ட்ரீ எண்ணெய்யில் பூஞ்சை தொற்றுக்கள் வராமல் காக்கும் மூல பொருட்கள் உள்ளதால் இது மார்பின் அடியில் வரும் ராஷஸ்சை வெகு விரைவில் குணமாக்கும் ஆற்றல் பெற்றது. எல்லா விதமான சருமம் சம்பந்தமான வியாதிகளுக்கும் டீ ட்ரீ எண்ணெய் நல்ல மருந்து. வறண்ட சருமத்தை சமமாக்கி எரிச்சல்களில் இருந்தும் பாதுகாக்கும்.

6 அல்லது எட்டு துளிகள் டீ ட்ரீ எண்ணெயில் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி வந்தால் சரும புண்கள் நீங்கி இயல்பான நிறத்தில் சருமம் இருக்கும். மேலும் ஒவ்வாமைகள் ஏற்படாமல் சருமத்தை காக்கும். காலை குளித்த பின்னும் இரவு தூங்கும் முன்னும் ஐந்து நிமிடம் மசாஜ் போல இந்த எண்ணெயை பாதிப்பு பகுதிகளில் தடவி வருதல் வேண்டும்.

துளசி

துளசி இலைகளில் கிருமி நாசினி , வீக்கம் மற்றும் வலிகள் குறைக்கும் பண்பு ஆகியவை உள்ளன. வெயினால் ஏற்படும் அலர்ஜிகள் அல்லது பூஞ்சை தொற்றுகளால் ஏற்படும் அலர்ஜிகள் இரண்டையும் துளசி இலை சரி செய்யும் சக்தி பெற்றது. பாதிக்கப்பட்ட பகுதியில் துளசி சாறை தினமும் மூன்று முறை தடவி மசாஜ் செய்து விட வேண்டும். புதிய துளசி இலைகளோடு ரோஸ் வாட்டர் கலந்து தடவி வந்தாலும் குணமாகும்.

சோற்று கற்றாழை

சோற்று கற்றாழையில் ஆன்டி செப்டிக் இருப்பதால் எல்லா விதமான தோல் வியாதிக்கும் இது சிறந்த மருந்தாகிறது. இயற்கையில் சோற்று கற்றாழை விட்டமின் ஈ உள்ளது . மேலும் தோலை ஈரப்படுத்தும் குணங்கள் அதிகம் இருக்கிறது. இதனால் தோல் அரிப்பு அல்லது எரிச்சல், தோல் சிவத்தல், தோல் வறண்டு போதல் போன்ற குறைகளை சரி செய்யும்.

சோற்று கற்றாழையை வெட்டி, உள்ளே ஜெல் போன்ற வெள்ளை சாற்றை எடுத்து மார்பகங்களுக்கு கீழ் தடவி, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். தினமும் இரண்டு முறை இதை செய்து வர மார்பக புண்கள் சரியாகும்.


பூண்டு

பூண்டிற்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் வீக்கத்தை குறைக்கும் குணம் அதிகம் இருப்பதால் எப்போதுமே இது சரும வியாதிகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. மேலும் இது சருமத்தின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சருமத்தை விரைவில் குணம் அடைய செய்கிறது.

நான்கு அல்லது ஐந்து பல் பூண்டை நன்றாக அரைத்து மார்பின் அடியில் தடவி அதன்பின் 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி வர வேண்டும். தினமும் இரண்டு முறை இவ்வாறு செய்து வர சரும அலர்ஜிகள் விரைவில் சரியாகும். மேலும் சாப்பாட்டிலும் அதிகமாக பூண்டு இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.

சோளமாவு

மார்பகங்கள் கீழ் ரேசஸ் வர மிக முக்கியமான காரணம் அதிக வியர்வைதான். பொதுவாக அணியும் உடைகளால் காற்றோட்டம் இல்லாத வகையில் அந்த இடம் பாதிக்கப்படுகிறது.அதனால் அந்த வியர்வை ஈரம் காய்வதில்லை. அதனால்தான் மிக எளிதாக இங்கு பாக்டிரியா தொற்றுகள் ஏற்பட்டு விடுகிறது. சோளமாவு ஈரப்பதத்தை உறிஞ்சும் சக்தி கொண்டது. எனவே இதனை மார்பகங்கள் அடியில் தடவினால் எரிச்சல் மற்றும் அரிப்புகளை குறைக்கிறது. ஆனால் சோளமாவு தடவிய பிறகு அந்த பகுதி வியர்க்காமல் பார்த்து கொள்ள வேண்டும். காரணம் இது மேலும் பூஞ்சை வளர வாய்ப்பு தரும்

சோளமாவு தடவும் முன்பும் பின்பும் சருமம் ஈரப்பதமின்றி இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதியை சோப் மற்றும் நீரால் நன்கு கழுவிவிடவும் . அதன் பின் அதனை துடைத்து அந்த இடத்தில சோளமாவு தூவி வர வேண்டும். தினமும் இரண்டு முறை செய்து வந்தால் மார்பக ரேசஸ்கள் விரைவில் மாயமாகும் அதிசயத்தை பார்க்கலாம்.


மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers