ஹை ஹீல்ஸ் அணிவதால் உண்டாகும் பிரச்சனைகள் குறித்து தெரியுமா?

Report Print Kabilan in பெண்கள்

’High Heels' எனும் குதிகால் காலணிகளை பெண்கள் பெரும்பாலும் விரும்பி அணியும் நிலையில், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இங்கு காண்போம்.

  • High Heels காலணிகளை அணியும் 50 சதவித பெண்களுக்கு காலில் சுளுக்கு, குதிகால் வலி ஏற்படும். மேலும், குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும்.
  • ஆனால் அவர்களின் காயம் வெளியே தெரியாமல் இருக்க வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கும்.
  • இயல்பு நிலையை பாதிக்கும் வகையில், குதிகால் நரம்பில் ‘நியுரோமா’ என்னும் கடுமையான வலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

  • High Heels காலணிகளை நீண்ட நேரம் அணிந்திருந்தால், குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும்.
  • அதிக உயரமான High Heels காலணிகளை நீண்டநேரம் அணியும் போது முதுகு தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.
  • High Heels காலணிகளை எந்த அளவிற்கு அழகு உள்ளதோ, அதே அளவு ஆபத்தும் உள்ளது. எனவே, அதிக நேரம் இந்த காலணிகளை அணிந்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்