கருப்பை கோளாறுக்கான பாட்டி வைத்தியம்

Report Print Fathima Fathima in பெண்கள்

இன்றைய காலகட்டத்தில் 10லிருந்து 12 வயதுக்குள் பெண் பிள்ளைகள் பூப்பெய்வது சர்வசாதாரணமாகிவிட்டது.

மற்றொரு புறம் 13 வயதுக்கு மேலும் பூப்படைவதில் தாமதமாகிறது, காரணம் உணவு முறையும், வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களும் தான்.

சத்து பற்றாக்குறை, உடல் வளர்ச்சியில் மாற்றம் உட்பட பல காரணங்கள் உள்ளன.

இதுதவிர மாதவிடாய் மாதந்தோறும் வரவேண்டும், ஒரு சிலருக்கு 40 நாட்களுக்கு ஒருமுறை, ஏன் இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட மாதவிடாய் வருகிறது.

இதற்கு பெரும்பாலும் காரணமாய் இருப்பது கருப்பை நீர்க்கட்டிகள் தான்.

இதன் விளைவு குழந்தையின்மை, மாதவிலக்கு கோளாறு, மன உளைச்சல் உட்பட பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

கருப்பை கோளாறுக்கான பாட்டி வைத்தியம்
  • கருப்பை கோளாறுகளை தவிர்க்க வாழைப்பூ சாறு, பொரியல் வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • வெள்ளைப்படுதலை தடுக்க முருங்கைக் கீரை, தயிர் சேர்க்கவும். கத்தரிக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதை தவிர்க்கவும்.
  • முருங்கைக் கீரை சூப், முடக்கத்தான் கீரை சூப், மணத்தக்காளிக் கீரை சூப் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டியது அவசியம்.
  • கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கலந்த பொடி வகை அல்லது மாத்திரை எடுத்துக் கொள்வதன் மூலம் கருப்பை தொந்தரவால் உண்டாகும் முழங்கால் வலி, இடுப்பு வலி ஆகியவற்றை தடுக்கலாம்.
  • ஆலமரப்பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும்.
  • ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெயில் குழைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers