மார்பக வலி! பெண்கள் அவசியம் படிக்க வேண்டிய தகவல்

Report Print Fathima Fathima in பெண்கள்

இளவயது பெண்களுக்கு மாதவிடாய் காலங்களின் போது மார்பகத்தில் வலி ஏற்படும்.

மாதவிடாய் காலத்திற்கு முன்பாக ஈஸ்ட்ரோஜென் மாற்றங்களும், அதனால் ஏற்படும் விளைவுகளுமே இதற்கு காரணமாகிறது.

இதுதவிர நாம் அன்றாடம் செய்யும் சிறுசிறு தவறுகள் கூட காரணமாக அமையலாம்.

பொருத்தமற்ற உள்ளாடைகள்

பெண்கள் அணியும் உள்ளாடைகள் அவர்களது உடலமைப்புக்கு ஏற்றவாறு பொருத்தமானதாக இருக்க வேண்டும், மிகவும் இறுக்கமான பிராக்கள் அல்லது சிறிய கப் உடைய பிராவை அணிந்தாலும் வலி உண்டாகும்.

வியர்வை

சிலருக்கு உடலை விட மிக பெரிய அளவிலான மார்பகங்கள் இருக்கும், இதனாலும் வலி ஏற்படலாம், வியர்வை வெளியேறாமல் இருந்தால் கூட மார்பகம் வலிக்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சியின் போதோ, அதிகமாக பளு வாய்ந்த வேலைகளை செய்யும் போதோ வலி ஏற்படலாம்.

அத்துடன் விளையாட்டு வீராங்கனைகள் சரியான உள்ளாடைகளை தெரிவு செய்து அணிந்து விளையாடுவது அவசியம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...