புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த கதாநாயகிகள்

Report Print Kabilan in பெண்கள்

புற்றுநோயின் தாக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் குணப்படுத்தி விடலாம் என்ற நிலையில், இந்நோயின் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த கதாநாயகிகள் குறித்து இங்கு காண்போம்.

மம்தா மோகன்தாஸ்

மலையாள நடிகையான மம்தா மோகன்தாஸ், தமிழில் ‘சிவப்பதிகாரம்’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்ட மம்தா, அந்நோயுடன் போராடி மீண்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் மம்தா மோகன்தாஸ்.

கவுதமி

நடிகை கவுதமியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது இவர் புற்றுநோயிற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

மனீஷா கொய்ராலா

பம்பாய், இந்தியன், முதல்வன், பாபா போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மனீஷா கொய்ராலா. இவர் கடந்த 2012ஆம் ஆண்டு திடீரென மயங்கி விழுந்தார்.

அதனைத் தொடர்ந்து, மனீஷாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அதன் பின்னர், அவர் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தார்.

லிசா ரே

தமிழில் ‘நேதாஜி’ என்ற படத்தில் நடித்த லிசா ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதன் பின்னர், அதற்காக உரிய சிகிச்சை பெற்று மீண்டு வந்தார்.

சோனாலி பிந்த்ரே

காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற தமிழ் படங்களில் நடித்த ஹிந்தி நடிகை சோனாலி பிந்த்ரே தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும், அதற்காக சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவித்திருந்தார்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...