பெண்களை தாக்கும் எலும்பரிப்பு நோய்: தடுப்பது எப்படி?

Report Print Kabilan in பெண்கள்

பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்பு கோளாறுகளை விட அதிகளவில் ஏற்படுவது ‘எலும்பரிப்பு நோய்’ ஆகும்.

எலும்பரிப்பு நோய்

பெண்களின் உடலில் உள்ள திசுக்கள் 30 வயது வரை ஆரோக்கியமான நிலையிலேயே இருக்கும். ஆனால், மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புத் திசுக்கள் சுருங்கும் வாய்ப்பு மிகுதியாக உள்ளது.

இந்த நிலை நீடித்தால் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகம். எலும்பரிப்பு நோயானது எந்த அறிகுறியையும் வெளிக்காட்டாது. எலும்பரிப்பால் எலும்புகள் பலவீனமடைந்தால், வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

பெண்களில் இரண்டில் ஒருவர் இந்த எலும்பரிப்பு நோயால் அவதிபடுகிறார். 35 வயது வரையில் பெண்களுக்கு எலும்புகளின் வளர்ச்சியும், மொத்த எடையும் ஒரே சீராக இருக்கும். அதன் பிறகு, ஒரு எதிர்மறை சுண்ணாம்புச் சத்து சமநிலை பெறாததால் எலும்பரிப்பு துவக்க நிலையை அடையும்.

இதனால் ஒவ்வொரு ஆண்டும் 0.3 என்ற அளவில் எலும்பின் எடையில் இழப்பு ஏற்படும். மாதவிலக்கு நின்ற பின்னர், எலும்பு எடை குறைவு 0.5 சதவிதம் என அதிகரிக்கும். இதனால், வெகு சுலபமாக எலும்பு முறிவுகள் ஏற்படும்.

தீர்வு
  • எலும்பரிப்புக்கு தீர்வு என்னவென்றால் சுண்ணாம்புச் சத்தை சமநிலையில் வைத்துக் கொள்வது தான்.
  • நடைப்பயிற்சி இந்த பிரச்சனைக்கு சிறந்த பலனை தரும்.
  • ஆல்கஹால், புகைப்பிடிக்கும் பழக்கங்கள் உள்ளவர்கள் அறவே தவிர்க்க வேண்டும்.
  • கால்சியம், வைட்டமின் 'D' ஆகிய சத்துக்கள் சரியான அளவில் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • போதிய அளவு உடற்பயிற்சியை தினமும் மேற்கொள்ள வேண்டும்.
  • மாதவிலக்கு சரியில்லாத பெண்களும், நீண்ட நாள் தடைப்பட்ட மாதவிலக்கு உள்ள பெண்களும் அந்த கோளாறுகளை சரி செய்துகொள்வது நல்லது.
  • மாதவிலக்கு நின்ற பெண்கள் மற்றும் எலும்பரிப்பு நோய் உள்ள பெண்கள் தகுந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers