மாதவிடாயின் நிறம் என்ன? கண்டிப்பாக இதை தெரிந்து கொள்ளுங்கள்

Report Print Fathima Fathima in பெண்கள்

மாதவிடாய் காலத்தில் பெண்ணின் உடலிலிருந்து வெளியேறும் உதிரத்தின் நிறத்தை வைத்தே ஆரோக்கியத்தை கணித்து விடலாம்.

மாதவிடாய் நாளில் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் ரத்தம், இறுதி நாட்களில் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

அவ்வாறு இல்லாமல் சிலருக்கு ஆரஞ்சு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கலாம், இதை கவனிக்க வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமையாகும்.

எனவே ஒவ்வொரு நிறமும் எதை வெளிப்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அடர்சிவப்பு நிறம்

இது பழைய ரத்தத்தை குறிக்கிறது, நீண்ட காலமாக கருப்பையில் சேமிக்கப்பட்ட இந்த ரத்தம் நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு கருப்பையை விட்டு வெளியே வருகிறது.

சிவப்பு நிறம்

கருப்பையில் இருந்து உடனடியாக வெளியேறும் புதிய ரத்தத்தை குறிக்கிறது, மாதவிடாய் அதிகம் உள்ள நாட்களில் வெளியேறும்.

இளஞ்சிவப்பு நிறம்

ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியை குறிக்கின்றது, பொதுவாக 2வது நாளில் இந்த நிறத்தில் வெளியேறும்.

சிவப்பு நிற திட்டுகளுடன் கருப்பு நிறம்

மிகவும் ஆபத்தான ஒன்று, இவ்வாறு இருந்தால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும், கருச்சிதைவு அல்லது கருப்பையில் ஏற்பட்டுள்ள தொற்றை குறிக்கிறது.

எனினும் 4வது நாளி் கருப்பு நிற உதிரத்துடன் சிவப்பு நிற தட்டுகளை கண்டால் உறைந்த உதிரத்தை குறிக்கும், இதைப்பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை.

ஆரஞ்சு நிறம்

கருப்பையில் வாயிலுள்ள திரவங்களுடன் உதிரம் கலந்து வெளியேறுவதால் இந்த நிறம் இருக்கும், பிரகாசமாக இருந்தால் கருப்பை தொற்று இருக்கிறது என அர்த்தம், இதனுடன் நாற்றமும் இருக்கும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers