பெண்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்மான நோய்: தடுப்பது எப்படி?

Report Print Jayapradha in பெண்கள்

உடலின் ரத்த உற்பத்தியில் எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எலும்புகளுக்கு வலு சேர்க்க கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உதவுகின்றன.

உடல் இயக்கம் இன்றி இருக்கும் போது ரத்த செல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்படும். இதுவே எலும்பு தேய்மானத்துக்கு முக்கிய காரணம் ஆகிறது.

காரணங்கள்
 • வயதாகும் பொழுது பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு வேகமாக குறைவதால், அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் வாய்ப்பும் மிக அதிகமாகிறது.
 • தைராய்ட் ஹார்மோன்களின் அளவு கூடும்போது, சிறுநீர் மூலமாக கால்சியம் வெளியேறி குறைபாடு உண்டாகி, எலும்பின் அடர்த்தி குறைந்து அதன் மூலம் எலும்புகள் வலுவிழந்து காணப்படுகின்றன
 • எலும்புகளின் தேவையான கால்சியம் சத்துக்களை இதயம், தசை, நரம்பு போன்றவை எடுத்துக்கொள்வதால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு நாளடைவில் எலும்புகள் தேய்ந்து வலுவிழந்து உடைகின்றன.
 • உடலில் எலும்புக்கு தேவையான வைட்டமின்D குறைபாடு ஏற்படும்போது கால்சிட்ரியால் அளவும் குறைந்து எலும்பை பலவீனமடையச் செய்கிறது.
அறிகுறிகள்
 • ஒருவருக்கு எலும்பு தேய்மானம் இருந்தால் இடுப்பு, தோள், மணிக்கட்டு, முட்டி, முதுகு, கழுத்து உள்ளிட்டவற்றில் திடீரென வலி ஏற்படும்.
 • அடி முதுகு வலி, முதுகெலும்பு வளைதல், எடை குறைதல், அழுத்தத்தினால் எலும்புமுறிவு ஏற்படுதல் போன்றவை பொதுவான அறிகுறிகள் ஆகும்.
 • மேலும் சில நேரம் இரவில் சரியான தூக்கமின்மை மற்றும் கால், கை, விரல்கல் மரத்துப்போதல் போன்ற உணர்வு இருக்கும்.
எலும்பு தேய்மான நோயை குணப்படுத்தும் முறை
 • வெந்தயத்தை பொடி செய்து முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் இடுப்பு வலியில் இருந்து நிவாரணம் பெறலாம்.
 • ஆல மர மொட்டுகளை பொடி செய்து சாப்பிட்டால் இடுப்பு, எலும்பு வலியை தடுக்கலாம்.
 • ஆளிவிதை 100 கிராம் எடுத்து பொடி செய்து, இத்துடன் குங்கிலி பஸ்பம் 10 கிராம் சேர்த்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
 • எலும்பு தேய்மானத்தால் ஏற்படும் மூட்டு வலிக்கு அவுரி இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.
 • அமுக்காரா, சுக்கு, ஏலக்காய், சித்தரத்தை தலா 100 கிராம் எடுத்து அரைத்து தினமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி, மூட்டு, இடுப்பு மற்றும் தொடை வலி குணமாகும்.
 • அத்திக்காயை வேக வைத்து சிறு பருப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் கை, கால் வலி குணமாகும்.
 • அத்தி மரத்தில் இருந்து பால் எடுத்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி, இடுப்பு வலி, தண்டுவடக் கோளாறு குணமாகும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்