பெண்களே உஷார்! ஒருபோதும் இந்த 7 பொருளையும் முகத்தில் போடவே போடாதீங்க

Report Print Jayapradha in பெண்கள்

ஒருவர் முதலில் தங்கள் சருமம் எந்த வகையை சார்ந்தது என்பதை கண்டறிந்து பின் அதற்கேற்ற பொருகளை உபயோகிப்பதே சிறந்தது.

எதையுமே அளவுக்கு அதிகமாக உபயோகிக்க கூடாது, அவ்வாறு செய்தால் உங்கள் சருமத்தில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கி விடும்.

அந்த வகையில் முகத்தில் போடக் கூடாத சில அழகு சார்ந்த பொருட்கள் எவையென்றும் அவற்றை உபயோகியப்பதால் உண்டாகும் பிரச்சனைகளை என்னவென்று பார்ப்போம்.

பீர்

பீரில் உள்ள அமிலத்தன்மை முகத்தில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை குறைத்து முகத்திற்கு வறட்சியான, பொலிவில்லாத தோற்றத்தை தரும். மேலும் இதனை உபயோகிக்கும்போது முகத்தில் பருக்கள் உண்டாகும்.

வினிகர்

முகத்திற்கு பயன்படுத்தும் வினிகரிலும் அதிகப்படியான அமிலத்தன்மை இருப்பதால் அவற்றை உபயோகிக்கும் போது சருமத்தில் ஒருவிதமான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வினிகரில் சிறிது தண்ணீர் கலந்து உபயோகிப்பதே சரியான முறையாகும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை முகத்திற்கு போடும்பொழுது அதில் உள்ள அதிகப்படியான காரத் தன்மை சருமத்தின் PH அளவை குறைத்து முகத்தில் பருக்கள் சிறு கட்டிகள் உண்டாகலாம்.

பற்பசை

பற்பசைகளில் அதிகப்படியான ரசாயனங்கள் சேர்ந்திருப்பதால் இவற்றை முகத்தில் உபயோகித்தால் அவை முகத்தில் சுருக்கங்களை உண்டாக்கி முக அழகைப் பாதிக்கின்றன,

புதினா இலைகள்

புதினா இலைகள் முகத்திற்கு புத்துணர்வை அளித்தாலும் அதில் உள்ள மென்தால் முகத்தில் சிவப்பு புள்ளிகள் மற்றும் பருக்களை தோற்றுவிக்கிறது. மேலும் அடிக்கடி புதினாவை முகத்தில் போடுவதால் சருமம் கருமை அடைவதாகவும் கூறப்படுகிறது.

உடல் லோஷன்

உடல் லோஷனில் பல வகையான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் அவற்றை முகத்தில் போடும் பொழுது முகத்தின் மென்மையான சருமத்தை பாதிக்கிறது.

வாசலின்

வாசலின் முகத்திற்கு உபயோகித்தால் தூசி, அழுக்கு போன்றவை முகத்தில் ஒட்டிக் கொண்டு முக சரும துவாரங்களுக்கு மேல் மற்றொரு அடுக்கை உருவாக்கி விடும். இதனால் சரும துவாரங்கள் அடைப்பட்டு உங்கள் சருமம் பாதிப்படைகிறது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்