சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வந்தால் என்ன நடக்கும்? கதிகலங்க வைக்கும் தகவல்கள்

Report Print Santhan in பெண்கள்

கேரளாவில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்குள் எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை பெண்கள் தங்களுக்கு கிடைத்த சுதந்திரமாக பார்க்கின்றனர். அதே சமயம் எல்லா வயது பெண்களும் சபரிமலைக்கு சென்றால் அதில் இருக்கக்கூடிய சிக்கல்கள், அவர்களுக்கு அளிக்க வேண்டிய பாதுகாப்பு, பெண்கள் எதிர்கொள்ள வாய்ப்பிருக்கும் அசெளகரியங்கள் பற்றி சபரிமலை கோவில் தேவசம்போர்டு பட்டியலிட்டுள்ளனர்.

  • பொதுவாக கரவிளக்கு நாளில் குறைந்தது ஐந்து லட்சம் பேராவது கூடுவர். பெண்கள் அனுமதிக்கப்படுகையில் அது 40 சதவீதம் அதிகமாகும், இதை எப்படி சமாளிப்பது?
  • கூட்டம் அதிகரிக்கும் போது நடைப்பந்தல் முதல் சரங்குத்தி வரை தடுப்பு வேலிக்குள் பக்தர்கள் காத்திருப்பது வாடிக்கை. இனி பெண்களுக்காக தனி காத்திருப்பு கூடம் அமைக்க வேண்டும்! இது சாத்தியமா?
  • நெடும் காத்திருப்பை தவிர்க்க, 18 படிகளின் அகலத்தை அதிகரிக்க தேவசம்போர்டு யோசித்தபோது தந்திரிகள் அதற்கே தடை போட்டுவிட்டார்கள்.
  • சீசன் மாதமான டிசம்பர் மற்றும் ஜனவரிகளில் குளிர் மிகவும் அதிகமாக இருக்கும். அப்போது இங்கு வரும் சிறுமிகள், இளம்பெண்கள் அதை தாங்குவார்களா? சன்னிதானத்தில் பெண்களுக்கென தனி மருத்துவமனைகள், அதிக பெண் மருத்துவர்களை பணியமர்த்தவும் வேண்டும்.
  • சன்னிதானத்தில் மரக்கூடம் வரை வரிசை நிற்கும். இதில் பெண்களுக்கு தனி வரிசையை உருவாக்குவது என்பது மிகவும் சிரமம்.
  • இருக்கும் 18 படிகளில் நிமிடத்துக்கு 30-முதல் 52-பேர் வரை ஏறமுடியும். கூட்டத்தில் பொலிசார் தூக்கிவிடும் போது 100-பேர் வரை ஏறமுடியும். படிக்கட்டுகளில் பெண்களை எப்படி தூக்கிவிட முடியும்? அகலம் குறுகிய படிகளில், பெண்களுக்கு தனி வரிசை வைத்து, பெண் பொலிசாரால் தூக்கிவிட வசதி செய்ய முடிவது சாத்தியமா?
  • இதையெல்லாம் விட, சன்னிதானத்தில், பம்பையில், நிலக்கல்லில் என அத்தனை இடங்களிலும் பெண்களுக்கு தனியாகவும், பாதுகாப்பாகவும் கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும். சந்நிதானத்தில் இதை செய்வதையெல்லாம் கோயிலின் மரபு எந்தளவுக்கு அனுமதிக்கும் என்பது தெரியவில்லை.
  • பெரியார் புலிகள் சரணாலய பகுதிக்குள்தான் சபரிமலை கோயில் அமைந்துள்ளது. யானைகள், புலிகளில் ஆரம்பித்து வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமுள்ள பகுதி. இதற்குள் பெண்களின் பாதுகாப்பு?
  • கடந்த சில வருடங்களுக்கு முன் நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய புல்மேடு - பம்பை ஹில்டாப் விபத்துக்களை தற்போது நினைத்தால் கூட பயம் வரும் நிலையில், இந்த பகுதியில் பெண்களும் வரப்போகிறார்கள் என்றால் நிலைமை என்னாகும்?
இப்படி பல பிரச்சனைகள் இருப்பதால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து விரைவில் தேவசம் போர்டு முடிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers