நான் பிறப்புறுப்பு இல்லாமல் பிறந்தவள்! ஆனால் காலம் செல்ல நடந்த மாற்றம்: ஒரு பெண்ணின் கதை

Report Print Deepthi Deepthi in பெண்கள்
454Shares
454Shares
ibctamil.com

ஆண்ட்ரியா ட்ரிகோ என்னும் பெண்மணி Mayer-Rokitansky-Küster-Hauser (MRKH) syndrome என்ற குறைபாட்டுடன் பிறந்துள்ளார்.

பிறந்த சமயத்தில் எல்லா குழந்தைகளையும் போல் எந்த வித குறைபாடும் இல்லாதவராய் தான் காணப்பட்டார். உடலில் நோய் நொடிகளுக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.

ஆனால், 17 வயதாகியும் ஆண்ட்ரியா பூப்படையவில்லை. பரிசோதனையில், பரிசோதனையின் முடிவில் ஆண்ட்ரியா பிறக்கும் பொழுதே பிறப்புறுப்பு மற்றும் கருப்பை இல்லாமல் பிறந்து இருக்கிறார் என்பது தெரிய வந்தது.

தனது பிறப்புறுப்பு உள்ளது ஆனால் மருத்துவர் இல்லை என்பதை கேட்டு குழப்பமுற்ற ஆண்ட்ரியாவிற்கு மருத்துவர் எடுத்துரைக்க தொடங்கினார் . அதாவது வெளியில் தெரியும் உடல் பாகம் வெளித்தோற்றத்திற்கு மட்டுமே, ஆனால், உடலின் உட்புறமாக பிறப்புறுப்பு மற்றும் கருப்பைக்கான எந்த ஒரு அமைப்பும் இல்லை.

இதனால் தான் ஆண்ட்ரியாவின் உடலில் பிறப்புறுப்பிலிருந்து எந்த ஒரு வெளியேற்றமும், மாதவிடாய் சுழற்சியும் ஏற்படவில்லை.

அறுவை சிகிச்சை செய்து பிறப்புறுப்பை பெற முடியும்; பிறப்புறுப்பை பெற்ற பின் எல்லோர் மாதிரியும் உன்னால் உடலால் உறவு கொள்ள முடியும். ஆனால் கருப்பையை பெற முடியாது; குழந்தை வேண்டும் என்றால் வாடகைத்தாய் மூலம் பெற்று கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மருத்துவர் தந்த தீர்வின் படி பிறப்புறுப்புக்கான அறுவை சிகிச்சை செய்து கொண்டார்;

பின் சில வருடங்களில் தனது மனதை கவர்ந்த ஃபிராங்க் என்பவரிடம் தன்னை பற்றிய விவரங்களை கூறி, திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டு, பிராங்க் இதற்கு ஒத்துக்கொள்ளவே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆண்ட்ரியாவின் பிறப்புறுப்பு சரிவர இயங்க அவள் வாரத்திற்கு 4 முறை உடலால் கணவருடன் உறவு கொள்ள வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தினார்!

தான் குழந்தையை பெற்று கொள்ளாமல் வேறு எந்த முறை மூலமும் குழந்தை பெற்று கொள்ளப்போவது இல்லை என்று முடிவு செய்தார். அவள் கணவரும் இதற்கு ஒப்புக்கொள்ளவே, தன்னை போல் பிறந்த பல ஆண்களையும் பெண்களையும் கண்டறிந்து உதவ தொடங்கினார்.

தன்னை போல் இருக்கும் ஆண், பெண் மற்றும் குழந்தை பிறப்பில் பிரச்சனைகளை சந்திக்கும் தம்பதியருக்கு உதவி வருகிறார். அவர் செய்யும் சேவையை பாராட்டி பல விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. TEDx பேச்சாளராக மாறி உள்ளார் ஆண்ட்ரியா.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்