அன்று குண்டாக இருக்கிறாய் என அவமானப்படுத்திய கணவர்! இன்று பாடி பில்டிங்கில் பதக்கம்: சாதித்த தமிழ்பெண்ணின் கதை

Report Print Deepthi Deepthi in பெண்கள்
659Shares

உடல் பருமன் காரணமாக கணவரால் வெறுத்து ஒதுக்கப்பட்டு அவமானங்களை சந்தித்த ரூபி என்ற தமிழ்பெண் இன்று பலருக்கும் முன் மாதிரியாக இருக்கிறார்.

6 வயது மகனின் தாயான ரூபி பியூட்டி அசாமில் நடந்த தேசிய அளவிலான பாடி பில்டிங் போட்டியில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார்

இந்த சாதனைகள் அனைத்தும் மிக எளிதாக நடந்து விடவில்லை.வலியும்,சோதனைகளும் நிறைந்த அந்த பயணம் தான் இவரது வாழ்க்கை.

எனது உடல் பருமனால், என் கணவருக்கு என் மீது அன்பில்லாமல் போனது. இதனால் அவர் வீட்டை விட்டு சென்றார். அப்போது தான் எனது நிலை குறித்து நான் உணர்ந்தேன். உடற்பயிற்சி நோக்கி அந்த சமயத்தில் தான் என் முழு கவனத்தையும் திருப்பினேன்.

முதலில் நான் நடைப்பயிற்சியை ஆரம்பித்தேன். அதனால் மெல்ல மெல்ல எடை குறைந்தது. ஆனால் குழந்தை பெற்ற பிறகு எடை குறைப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது.

இருப்பினும் என லட்சியத்தில் குறிக்கோளாக இருந்தேன். பொருளாதா ரீதியாக பல சிரமங்களை சந்தித்தேன், சாப்பிடுவதற்கு தேவையான உணவினை வாங்குவதற்கு சிரமப்பட்டேன்.

மிஸ்.சென்னை பட்டத்தை வென்றதோடு அசாமில் நடந்த தேசிய அளவிலான போட்டியிலும் வென்று சாதித்துள்ளார்.

பெண்களால் பாடி பில்டிங் துறையிலும் சாதனைகள் செய்ய முடியும் என்பதை நிரூபித்ததோடு இந்தத் துறையில் தமிழ் மாநிலத்தில் இருந்து பெண்களே இல்லை என்ற தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

மிஸ் இந்தியா போட்டியில் பிட்னஸ் பிரிவில் கண்டிப்பாக ரூபி வெற்றி பெறுவார் என அவரது பயிற்சியார்க கார்த்திக் கூறியுள்ளார்.

பல தடைகளின் நடுவிலும் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ரூபி பியூட்டி நிச்சயம் ஒரு முன்னுதாரணம்!

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்