குட்டி கமெராவில் பறிபோகும் பெண்களின் அந்தரங்கங்கள்: எச்சரிக்கை தகவல்

Report Print Deepthi Deepthi in பெண்கள்

கழிவறை, ஓய்வு அறை, உடை மாற்றும் அறை, ஹோட்டல்களில் என பல்வேறு இடங்களிலும், கமெராக்கள் மறைத்து வைக்கப்பட்டு பெண்கள் படம்பிடிக்கப்படுகின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ரகசியமாக மறைத்து வைக்கப்படும் கமெராக்கள் அளவில் மிகவும் சிறியவையாக இருக்கும். ஆனால் அதில் அனைத்து செயல்பாடுகளும் தெளிவாக பதிவாகும்.

கழிவறை, கடைகளில் ஆடை மாற்றும் அறை, ஹோட்டலில் துணையுடன் தங்கியிருக்கும்போது என எல்லா இடங்களிமே செய்யப்படும் எல்லா செயல்களுமே அந்த கமெராவில் பதிவாகும்.

கமெராக்கள் ரகசியமாக வைக்கப்படும் இடங்கள்

கண்ணாடியின் பின்புறம்

கதவுகள்

சுவரின் ஏதாவது ஒரு மூலையில்

அறையின் மேற்கூரையில்

மின் விளக்கில்

புகைப்பட சட்டங்களில்

டிஷ்யூ காகிதம் உள்ள பெட்டியில்

பூக்குவளை, பூச்செண்டுகளில்

புகை கண்டறியும் கருவிகளில்

கமெரா இருப்பதை எப்படி கண்டறிவது?

பொது கழிப்பறையை பயன்படுத்தினாலும், துணி வாங்கும்போது, அங்கு அதை போட்டுப்பார்க்க உடை மாற்றும் அறைக்கு சென்றாலும், ஹோட்டலின் எந்த அறைக்கு சென்றாலும் கவனமாக இருப்பது அவசியம்.

அங்குள்ள பொருட்களை ஆராயவேண்டும். அறையின் மேற்கூரையின் மூலைகளில் ஏதாவது பொருட்கள் இருக்கிறதா என்பதை கவனிக்கவும்.

துளை ஏதேனும் உள்ளதா என்று கவனிக்கவும். துளை இருந்தால், அதனுள்ளே ஏதாவது வைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும்.

தேவையில்லாமல் கம்பியோ, ஒயரோ எங்காவது இருக்கிறதா என்றும் பார்க்கவேண்டும். அப்படி ஏதாவது கம்பியோ ஒயரோ இருந்தால், அது எங்கே போகிறது என்பதை கண்டுபிடிக்கவும். இது கேமரா இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்கலாம்.

மின்சார விளக்கை அணைத்து பார்க்கவும். ஆடை மாற்றும் அறையில் அல்லது ஹோட்டல் அறைக்கு செல்லும்போது, உள்ளே சென்றதுமே விளக்குகளை அணைத்துவிட்டு அறையை நன்றாக சுற்றி பார்க்கவும்.

எல்.ஈ.டி விளக்கு ஒளி இருப்பது தெரிந்தால், அது கமெராவாக இருக்கலாம். இருளிலும் செயல்பாடுகளை பதிவு செய்யும் கமெராக்களும் உள்ளன.

செயலி (App) மூலம் கண்டறிவது

ரகசிய கமெராக்களை கண்டறிவதற்கான பல செயலிகள் பயன்பாட்டில் உள்ளன. ஆனால், அந்த செயலிகளும் போலியானவையாக இருக்கலாம் என்ற சைபர் பிரிவு வல்லுநர்கள் கூறுகின்றனர்.

கமெரா எதுவும் இல்லை என்று அந்த செயலிகள் சொல்வதை கண்டு நீங்கள் நிம்மதியாக இருந்தால், உங்கள் அந்தரங்கம் பறிபோகலாம். அதுமட்டுமல்ல, உங்கள் செல்பேசியில் வைரஸையும் ஏற்படுத்தலாம்.

கண்ணாடி பரிசோதனை

உடை மாற்றும் அறைகள், குளியலறை, கேமரா என எல்லா இடங்களிலும் கண்ணாடிகள் பின்புறத்தில் கமெரா ரகசியமாக பொருத்தப்பட்டிருக்கலாம்.

ஹோட்டல் அறைகளில் மிகப் பெரிய கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கலாம். அதன் மறுபுறம் இருப்பவர்களுக்கு இந்தப் புறம் நடைபெறும் அனைத்தும் நன்றாக தெரியலாம். எனவே கண்ணாடியை கவனமாக பரிசோதனை செய்து பார்ப்பது அவசியம்.

கண்ணாடியின் மீது ஒரு விரலை வைத்து பரிசோதிக்கவும்.

கண்ணாடி மீது வைக்கும் உங்கள் விரலுக்கும், கண்ணாடியில் தோன்றும் உங்கள் உருவத்திற்கும் இடையே சிறிது இடைவெளி இருந்தால், கண்ணாடி, சாதாரண கண்ணாடி என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆனால் உங்கள் விரலுக்கும், கண்ணாடியில் தோன்றும் உங்கள் உருவத்திற்கும் இடையே இடைவெளியே இல்லை என்றால் பிரச்சனை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவும்.

உடனே மின்விளக்கை அணைத்து விட்டு, செல்பேசியின் ப்ளாஷை ஆன் செய்து, நான்கு பக்கமும் கவனமாக பார்க்கவும்.

அப்போது ஏதாவது ஓரிடத்தில் இருந்து பிரதிபலிப்பு தோன்றினால், அது கமெராவில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடியில் இருந்து வருகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

நீங்கள் துணிகளை மாற்றுவதற்கு முன்னர், கழிப்பறையை பயன்படுத்துவதற்கு முன்னர் அங்கிருக்கும் கண்ணாடியை பரிசோதனை செய்யவேண்டும்.

ரகசிய கமெராக்களில் இருந்து பாதுகாக்க சைபர் நிபுணர்கள் பல உக்திகளை கூறினாலும், அதிக எச்சரிக்கையும் விழிப்புணர்வும் இருப்பதுதான் அனைவருக்கும் நல்லது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்