வித விதமான ஆடைகள்.. ஆண்டுக்கு 80 லட்சம் வருமானம்! சாதித்த தமிழச்சி ஸ்வேதா

Report Print Kabilan in பெண்கள்

ரென்ட்டல் ஆடைகள் பிசினஸில் அசத்தி வரும் ஸ்வேதா போதர் என்ற பெண், ஆண்டுக்கு சுமார் 80 லட்சத்தை வருமானமாக ஈட்டி வருகிறார்.

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்வேதா போதர். இவரது தந்தை ஆடைகள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். கணினி பொறியியல் பட்டப்படிப்பை முடித்த ஸ்வேதா, தந்தையைப் போலவே தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க தொடங்கினார்.

சிறுவயதில் இருந்தே துணியின் ரகம், விலை, டிசைன்கள், டிரெண்ட போன்றவற்றில் அப்டேட்டாக இருந்த ஸ்வேதா, தனது படிப்பு முடிந்ததும் தன் துறை சார்ந்த சில தனியார் நிறுவனங்களில் சில ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார்.

பின்னர் ஒவ்வொரு மாத சம்பளத்தையும் சேமித்து வைத்து தனது பிசினஸிற்கான முதலீட்டை தயார் செய்துள்ளார். மேலும் தன்னுடைய பிசினஸ் மற்றவர்களிடம் இருந்து தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்துள்ளார்.

அதன் பின்னர், ரென்ட்டல் ஆடைகள் எனும் வாடகைக்கு உடைகளை வழங்குவதில் இருந்த நுணுக்கங்களை ஆராய்ந்து, ஆடைகளுக்கான மெட்டீரியல், ஷோரூம் தொடங்குவதற்கான இடம் என அனைத்தையும் திட்டமிட்ட பின் தந்தையிடம் தனது ஆவலை கூறியுள்ளார்.

அவர் சற்று தயங்கியபோதும் தனது முடிவில் உறுதியாக இருந்த ஸ்வேதாவிற்கு தனது ஆதரவை அவரது தந்தை தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பெங்களூரில் ‘கேண்டிட் நாட்ஸ்’ எனும் ரென்ட்டல் ஆடை நிறுவனத்தை தொடங்கினார்.

ஆண்-பெண் இருபாலருக்கும் ட்ரெண்டுக்கு தகுந்த ஆடைகளை வடிவமைத்த ஸ்வேதா, Western, Tradition, Trendy என எல்லா வகையான Outlook-க்கும் தேவையான ஆடைகள் மற்றும் அதற்கு பொருத்தமான Accessoris-களுடன் தயார் செய்தார். பிசினஸ் தொடங்கிய சில மாதங்களிலேயே பெண்களின் ஆடைகளை விட, ஆண்களின் ஆடைகளுக்கு நல்ல வரவு இருந்துள்ளது.

அதனால் ஆண்களை Grand Look-யில் காட்டும் Blazers, டக்சிடோ, ஜோத்பூரி சூட்ஸ், ஷெர்வானி போன்ற ஆடைகளை டிசைனர்கள் மூலம் வடிவமைத்துக் கொடுக்க ஆரம்பித்துள்ளார்.

இவ்வாறாக இந்த தொழிலில் ஆண்டுக்கு சுமார் 80 லட்சம் வருவாயாக ஸ்வேதா போதர் ஈட்டி வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘டிரெண்டிற்கு ஏற்ப நம்மை அப்டேட் செய்துகொண்டு, கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் நிச்சயம் வெற்றி தான்.

பள்ளியில் நல்ல மதிப்பெண் எடுத்தால், எங்களை ஊக்குவிக்க அப்பா பரிசு கொடுப்பார். அப்போது எனக்கு பரிசு வேண்டாம், அதற்கு பதிலாக என்னையும் பிசினஸ் பார்ட்னராக சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சின்ன வயதில் நிறைய முறை சொல்லியிருக்கிறேன். சிறுவயதிலிருந்தே பிசினஸ் வுமன் ஆக வேண்டும் என்பது என் கனவு’ என தெரிவித்துள்ளார்.

மேலும் தனது ரென்ட்டல் பிசினஸ் அவர் கூறுகையில், ‘எங்களுடைய ஆடையில் ஃப்னிஷிங் நன்றாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் எங்களை தேடி வர ஆரம்பித்தார்கள். எங்களுடைய ஷோரூமிலே டிசைனர்கள் குழு இருப்பார்கள்.

வாடிக்கையாளர்கள் எந்த நிகழ்ச்சிக்காக ஆடைகளை தெரிவு செய்கிறார்கள், என்ன மாதிரியான ஆடைகள் அவர்களின் உடல்வாகுக்கு பொருத்தமாக இருக்கும், எப்படி Accessoris-களை Mix match செய்வது என்று அவர்களுக்கு யோசனை வழங்குவார்கள்.

நேரில் வர முடியாதவர்களுக்காக ஒன்லைன் பக்கத்தை ஆரம்பித்தோம். ஒன்லைனில் எங்களிடம் இருக்கும் ஆடைகளையெல்லாம் Size பிரித்து Upload செய்தோம். வாடிக்கையாளர் எந்த ஆடையை வேண்டுமானாலும் தெரிவு செய்து கொள்ளலாம். அவர்களின் உடல் வாகு மற்றும் உயரத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து Home delivery செய்கிறோம்.

ரென்ட்டல் ஆடைகளைப் பொறுத்தவரை அதிகவிலை கொடுத்து வாங்க முடியாத டிரெண்டியான ஆடைகளுக்குத் தான் மக்களிடம் எப்போதும் Demand இருக்கும் என்பதால், டிரெண்டில் என்ன இருக்கிறது என்பதை Update செய்துகொண்டே இருப்பது அவசியம்.

அதேபோல் சிலருக்கு வாடகை ஆடை அணிந்தால் அலர்ஜி வருமோ? என்ற பயமும், சந்தேகமும் இருக்கும். நாங்கள் ஒவ்வொரு ஆடையையும் வெந்நீர், ஆன்டி-செப்டிக் லோசன் பயன்படுத்தித் துவைத்தே ஒவ்வொரு முறையும் கொடுக்கிறோம்.

ரென்ட்டல் ஆடைகள் பணத்தை மிச்சப்படுத்துகிறது என்பதால் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. மாறுபட்ட யோசனைக்கு எப்போதும் மதிப்பு அதிகம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers