பெண்களுக்கு ஆபாச வலை விரிப்பது எப்படி? எந்தெந்த பெண்களுக்கு குறி? ஒரு எச்சரிக்கை பதிவு

Report Print Deepthi Deepthi in பெண்கள்

இன்றைய நவீன உலகில் செல்போன், சமூகவலைதளங்களோடு மனிதர்களின் வாழ்க்கை ஒன்றாக கலந்துவிட்டது.

சமூகவலைதளங்களில் இருந்து மனிதனை பிரித்தெடுப்பது என்பது இயலாத ஒன்றாகிவிட்டது, இப்படி தன்னிலை மறந்து சமூகவலைதளங்களில் மூழ்கி கிடப்பதால் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.

அதற்கு உதாரணமான சம்பவம் தான் பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது, தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம்தான் தற்போது சமூகவலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

பெண்களை ஏமாற்ற சமூகவலைதளங்களில் கொடூரர்கள் வலைவிரிப்பது எப்படி?

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என எப்போதும் இதுபோன்ற சமூகவலைதளங்களில் அதிக நேரம் ஆன்லைனின் இருக்கும் பெண்களையே இவர்கள் அதிகமாக குறிவைக்கிறார்கள்.

பேஸ்புக்கில் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு பெண்கள் போடும் லைக்ஸ் , வீடியோக்களை வைத்து அவர்களை யூகித்துவிடுகிறார்கள் ஆண்கள்.

அதன்பின்னர், பெண்களுக்கு ஆதரவாக பேசி ஆசைவார்த்தைகளை தூண்டி பெண்களின் தொடர் நடவடிக்கைகளை கண்காணித்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என யூகித்துக்கொள்கின்றனர்.

அடுத்தபடியாக பெண்கள் சாட்டிங்கில் தொடர்புகொள்கையில் தான் பிரச்சனை அவர்களுக்கு ஆரம்பமாகிறது. சமூகவலைதளங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தால் அதனை எளிதில் காவல் துறையால் கண்டுபிடிக்க முடியாது என்பது கசப்பான உண்மையாக இருக்கிறது.

இதனால், முன்பின் தெரியாதவர்கள் மீது நம்பிக்கை வைக்கும் பெண்கள் பிரச்சனையில் சிக்குகிறார்கள்.

இதனால் பெண்கள் தங்களது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் குடும்ப விவகாரங்கள் குறித்தவற்றை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் 2 ஆயிரம் நண்பர்கள் இருந்தால், அதில் 80 சதவீதம் பேர் முன்பின் தெரியாதவர்கள் தான். அவர்கள் யாரும் உண்மையானவர்கள் கிடையாது. பேஸ்புக் தொழில்நுட்பத்தில் சில மாற்றங்கள் செய்யப்படுவதால் அதில் சுயவிவரங்கள் திருடப்பட வாய்ப்புள்ளது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

டிக்டாக், டப்மாஷ் மூலம் பெண்களே இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் ஆண்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கின்றனர் என வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் என்று வந்தவுடன் மனிதர்கள் நாகரீகத்தை மறந்துவிடுகிறார்கள். என்ன செய்ய வேண்டும் , என்ன செய்யக்கூடாது என்பதை பெண்கள் அறிந்துகொள்ள வேண்டும். மேலும், பாதிக்கப்படும் பெண்களும் இதுபோன்ற உண்மைகளை வெளிக்கொண்டு வந்தாலே பல வக்கிர முகங்கள் வெளிவரும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்