பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல - சில நொடிகளில் சாதித்து காட்டிய பெண்கள்... ஆச்சரிய வீடியோ!

Report Print Abisha in பெண்கள்

நாகலாந்து பெண்கள் படை ஒன்று சுலபம் இல்லை என்று நினைத்த காரியத்தை சில நொடிகளில் செய்து முடித்துள்ள வீடியோ வைரலாகி வருகின்றது.

பெண்களால் சாதிக்க முடியாது என்று ஒன்றும் இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் எனலாம். வாய்க்கால் சேற்றில் ஒரு எஸ்.யூ.வி ரக கார் சிக்கியுள்ளது. அது, மகேந்திரா நிறுவனத்தின் பொலீரோ மாடல் கார். ஆண்கள் உதவிக்கு வரட்டும் எனக் காத்திருக்கவில்லை நாகாலாந்து பெண்கள் படையினர். சில விநாடிகளிலேயே அதை அப்புறப்படுத்திவிட்டனர்.

காரின் முன் பகுதியைச் சில பெண்கள் உயர்த்துவதும் , காரின் பின்பகுதியைச் சில பெண்கள் இழுப்பதும் என சேற்றில் சிக்கிய காரை எளிதில் அப்புறப்படுத்த உதவ, உள்ளிருந்த ஓட்டுநரால் எளிதில் காரை பின்னே கொண்டு வர முடிந்தது. காரை வாய்க்காலிலிருந்து மீட்ட மகிழ்ச்சியில், பெண்கள் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக்கொண்டனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இது குறித்து அமைச்சர்களும் தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்தியுள்ளனர்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்