39 வயதிலும் இளமையுடன் ஜொலிக்கும் கரீனா கபூர்.. அழகின் ரகசியம் இதுதான்!

Report Print Kabilan in பெண்கள்

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் 39 வயதிலும் அழகாக, இளமையுடன் ஜொலிப்பதற்கான காரணங்கள் குறித்து இங்கு காண்போம்.

ராயல் பட்டோடி குடும்பத்தின் மருமகளும், பிரபல பாலிவுட் நடிகையுமான கரீனா கபூர் தற்போதும் இளமையுடன் காட்சியளிக்கிறார்.

39 வயதாகும் கரீனா, நடிகர் சயீப் அலிகானை 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். குழந்தை பெற்ற பிறகும் சுருக்கமில்லாத, பொலிவான சருமத்துடன் இருக்கிறார் கரீனா.

பெரிதாக மேக்கப் செய்துகொள்ளாத கரீனாவின் அழகின் ரகசியம் குறித்து இங்கு பார்ப்போம்.

தண்ணீர்

கரீனா ஒரு நாளைக்கு குறைந்தது 4-6 பொத்தல் நீரை பருகுவாராம். மினரல் தண்ணீரை தவிர்த்து, சாதாரண குடிநீரை பருகுவதே கரீனாவின் சரும அழகிற்கு காரணம். அத்துடன் அவரது தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் அதுதான் காரணமாக கூறப்படுகிறது.

மாய்ஸ்சுரைசர்

சரும வறட்சியை தடுக்க பயன்படுவது மாய்ஸ்சுரைசர். உடலின் உட்பகுதியையும், வெளிப்பகுதியையும் இது வறட்சியடையாமல் தடுக்கும்.

எனவே தான் கரீனா கபூர் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறை இதனை பயன்படுத்துவாராம். இவர் எங்கு சென்றாலும், தனது கைப்பையில் எப்போதுமே ஒரு மாய்ஸ்சுரைசரை வைத்திருப்பாராம்.

பாதாம் எண்ணெய்

நேரம் கிடைக்கும் போதெல்லாம் கரீனா பாதாம் எண்ணெய்யைக் கொண்டு, தனது சருமம் மற்றும் முடிக்கு மசாஜ் செய்வாராம். இதன்மூலம் சருமம் ஆரோக்கியம் பெறும்.

தேன் மசாஜ்

கரீனா தேனைக் கொண்டு சருமம் முழுவதும் மசாஜ் செய்வாராம். இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் சருமத்திற்கு பொலிவு தரும். இதனால் தான் மேக்கப் போடாமலும் கரீனா அழகாக தெரிகிறார்.

இயற்கையான ஃபேஸ் பேக்

இயற்கை பொருட்களைக் கொண்டு மட்டுமே கரீனா சருமத்திற்கு ஆரோக்கியம் சேர்க்கிறார். குறிப்பாக முகத்திற்கு மூலிகைப் பொருட்களைக் கொண்டு தான் ஃபேஸ் பேக் போடுவாராம்.

ஃபேஸ் கிளின்சராக தயிர் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பயன்படுத்துகிறார் கரீனா. தயிரில் இயற்கையாகவே உள்ள ப்ளீச்சிங் தன்மை, சருமத்தில் உள்ள இறந்த செல்களை முழுமையாக நீக்கி விடும்.

உடற்பயிற்சி

கரீனா தனது உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர். தனது பிரவத்திற்கு பின் எடையைக் குறைக்க உடற்பயிற்சியை அவர் மேற்கொண்டார். அத்துடன் எப்போதுமே உடற்பயிற்சியை கைவிடாததால், எப்போதும் Fit ஆக இருக்கிறார்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்