சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத சானிடரி நாப்கின் தயார் செய்து இளம் பெண் சாதனை

Report Print Kavitha in பெண்கள்

கோயம்புத்தூரை சேர்ந்த இஷானா என்ற 18 வயது பெண் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் முற்றிலும் பருத்தி கொண்டு நாப்கின் தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

இஷானா தனியார் நிறுவனங்கள் விற்கும் நாப்கின்களை பயன்படுத்தியதால் பல வகையான உடல் நல பாதிப்புகளை சந்தித்துள்ளதால் அதனாலேயே இந்த முயற்சியை முன்னெடுத்ததாக கூறியுள்ளார்.

இவர் இத்தகைய நாப்கின்களை பெரிய அளவில் இல்லாமல் ஒரே ஒரு தையல் மிஷினைக் கொண்டு கேட்போருக்கு மட்டும் செய்து கொடுத்து வருகிறார்.

மேலும் இதனால் சுற்றுசூழலுக்கு மட்டுமன்றி பெண்களின் உடல் நலனையும் பாதிக்கும் நாப்கின்களை தவிர்க்க வேண்டும் இதன் பயன்பாடு நிச்சயம் பெண்களுக்கு சௌகரியமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இஷானா இதை மற்றவர்களும் வீட்டில் எப்படி செய்யலாம் என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம் என்று கூறியுள்ளார்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்