பெண்ணுறுப்பை இயற்கை முறையில் சுத்தமாக வைத்திருப்பது எப்படி?

Report Print Abisha in பெண்கள்

பெண்கள் தங்களின் அந்தரங்க உறுப்பை சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். குறிப்பாக பல பெண்கள் தங்களின் அந்தரங்க உறுப்புகளை தவறாக சுத்தம் செய்கிறார்கள் என்பதே உண்மை.

அதில், குறிப்பாக கெமிக்கல்கள் அதிகம் கொண்ட சோப் பயன்படுத்தினால், பிறப்புறுப்பின் pH சமநிலையை பாதிக்க கூடும். வெதுவெதுப்பான நீரில் பிறப்புறுப்பை சுத்தம் செய்தாலே போதும். சந்தையில் இதற்கென பல பொருட்கள் விற்கப்பட்டாலும், இந்த மிருதுவான பகுதியில் இரசாயன பொருட்களை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம்.

கற்றாழை

கற்றாழையில் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை நிறைந்துள்ளது. கற்றாழை செடியிலிருந்து ஒரு இதழை எடுத்து, அதிலிருந்து ஜெல்லை தனியாக பிரித்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு தேக்கரண்டி வெதுவெதுப்பான நீரை கலந்து பயன்படுத்துங்கள்.

தயிர்

இக்கட்டான நேரங்களில், குறிப்பாக ஈஸ்ட் தோற்று ஏற்பட்டால், ஒரு கப் தயிர் உங்களை காப்பாற்றும். ஈஸ்ட் தொற்று நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை பாதிக்கும். எனவே, நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த தயிரை தடவினால், அது நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையின்மையை சரிசெய்யும். தயிரை பிறப்புறுப்பு பகுதியில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், தொற்றை சரிசெய்யும்.

எலுமிச்சை இலை

எலுமிச்சை இலை நுண்கிருமிகளின் தொற்றை எதிர்க்கும். மேலும் இது பிறப்புறுப்பின் pH-யை சமநிலையில் வைத்திருப்பதோடு, அந்த இடத்தில் துர்நாற்றம் இல்லாமல் வைக்க உதவுகிறது. இது மிகவும் எளிதான ஒன்று. சில எலுமிச்சை இலைகளை தண்ணீரில் போட்டு, தண்ணீர் பச்சை நிறமாக மாறும் வரை கொதிக்க விடவும். தண்ணீரை வடிகட்டி வெதுவெதுப்பாக இருக்கும் போது பயன்படுத்தலாம். அதற்கு முன் எலுமிச்சை இலைகளால் அழற்சி ஏற்படுமா என்று உறுதி செய்த பின்னர், மருத்துவரின் அறிவுரைப்படி பயன்படுத்தலாம்.

சமையல் சோடா

மேற்கூறியவற்றிலிருந்து, பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருக்க pH ஐ சமநிலையில் வைத்திருக்க வேண்டும் என்று உங்களுக்கே தெரிந்திருக்கும். இதற்கு உதவி புரியும் மற்றொரு பொருள் சமையல் சோடா. வெதுவெதுப்பான நீரில் 1 1/2 தேக்கரண்டி சமையல் சோடா கலந்து பயன்படுத்தலாம். ஆனால் கவனமாக இருக்கவும். அதிகளவு சோடாவை பயன்படுத்தினால். அது அந்த இடத்தின் ஈரத்தன்மையை உறிஞ்சிவிடும். எனவே, நன்றாக தண்ணீர் விட்டு கலந்த பின்னர் பயன்படுத்தவும்.

உப்புத்தண்ணீர்

தொற்று ஏற்பட்டால், அந்த இடத்தில் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரித்து அரிப்பும் வலியும் ஏற்படும். இதற்கான தீர்வு உப்புத்தண்ணீர். உப்புத்தண்ணீருக்கு பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி உள்ளது. 1 தேக்கரண்டி உப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து, தொற்று சரியாகும் வரை பயன்படுத்தவும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்