பெண்களுக்கான அந்தரங்க தகவல்!... கட்டாயம் படிக்கவும்

Report Print Kavitha in பெண்கள்

பொதுவாக எல்லா பெண்களும் தங்களது பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும்.

அதுமட்டுமின்றி பிறப்புறுப்பை எப்படி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும் என்பதையும் தெரிந்தும் வைத்து கொள்ள வேண்டும்.

பிறப்புறுப்பு சுத்தமாக, எந்தவித பிரச்னையும் இல்லாமல் இருந்தால் உங்களது உடல்நலமும் நன்றாக இருக்கும் எனப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது பிறப்புறுப்பை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

பிரச்சினைகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
 • நீச்சல், ஜிம் சென்ற பிறகு உள்ளாடையை அவசியம் மாற்றுங்கள். அணிந்து கொண்டே இருந்தால் தொற்றுக்கள் வரும்.
 • சாதாரண தண்ணீர் அல்லது மிதமான சோப் போட்டு பிறப்புறுப்பை சுத்தம் செய்யலாம்.
 • எப்போதும் முன்னிலிருந்து பின் என்றே சுத்தம் செய்யுங்கள். பின்னிலிருந்து முன் என சுத்தம் செய்ய கூடாது. ஏனெனில் மலக்கிருமிகள் பிறப்புறுப்பு இடத்தைத் தாக்கும். தொற்றை ஏற்படுத்தும்.
 • உள்ளாடைகளை அதிக கெமிக்கல் கொண்ட சோப், டிடர்ஜென்ட் பயன்படுத்தித் துவைக்க வேண்டாம். கெமிக்கல்களால் எரிச்சல், பாதிப்புகள் வரலாம்.
 • 3-4 மணி நேரத்துக்கு ஒருமுறை சானிட்டரி பேட் அல்லது டாம்பூனை மாற்றுங்கள்.
 • பிறப்புறுப்பு பகுதிகளில் உள்ள முடிகளை அடிக்கடி டிரிம் செய்து கொள்ளுங்கள்.
 • முடியை நீக்கும் கிரீம் பயன்படுத்தி முடியை நீக்க வேண்டாம். அந்த இடத்தில் முடியை நீக்கும் கிரீமில் உள்ள கெமிக்கல்கள் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
பிறப்புறுப்பை எப்படி சுத்தம் செய்ய வேண்டும்?
 • வாசனை மிகுந்த சோப், பாடி வாஷ், ஜெல், ஆன்டிசெப்டிக் ஆகியவற்றைத் தவிர்க்கவும். இவையெல்லாம் பி.எச் அளவை மாற்றி, பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.
 • உங்களுக்கு மாதவிலக்கு நடக்கும்போது, 2-3 முறையாவது பிறப்புறுப்பை சுத்தம் செய்யுங்கள். மலவாயும் பிறப்புறுப்பு பகுதியும் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
 • சாதாரண தண்ணீரோ சாதாரண உடலுக்குத் தேய்க்கின்ற சோப்போ போதுமானது. இதை வைத்தே பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்யலாம். இதற்காக எந்த பிரத்யேக வாஷ் எல்லாம் தேவையில்லை. இயற்கையான முறையில் வெஜினல் வாஷ் செய்யலாம்.
எந்த வகை ஆடைகள் அணிய வேண்டும்?
 • டைட் ஃபிட்டிங் உடைகள், பிறப்புறுப்பு பகுதியை சூடாக்கும். தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பருத்தியால் தயாரித்த உள்ளாடை அணிவது நல்லது. பாலிஸ்டர் வகை உள்ளாடைகள் தவிர்க்கவும்.
 • வெள்ளைப்படுதல் பிரச்னை இருந்தால் ஒரு நாளைக்கு இருமுறை உள்ளாடையை மாற்றுங்கள். இரவில் தூங்கும் போது உள்ளாடையைத் தவிர்க்கலாம்.
உள்தொடைக்கு சில பயிற்சிகளைக் கொடுக்க வேண்டும்

கதிரையில் அல்லது படுக்கையில் படுத்துக் கொண்டு கால்களை சுவற்றில் வைத்து மடக்கி, நிமிர்த்தலாம். இப்படி சின்ன சின்ன பயிற்சிகள் செய்வதால் தொடை இடுக்குகளில் அதிக சதை இருக்காது.

இதனால் அரிப்பு பிரச்னைகளும் வராது. நேராக உட்காருவதைப் பழகி கொள்ளுங்கள்.

இதனால் ரத்த ஓட்டம் சீராக நடைபெறும். பிறப்புறுப்பு, அடி இடுப்புக்கு பகுதிக்கு சீராக ரத்த ஓட்டம் செல்லும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்