பெண்களுக்கான மார்பக அழகு குறிப்பு!

Report Print Abisha in பெண்கள்
558Shares

மார்பகம் சரியாக இருந்தால் உடல் அழகாக தெரியும். அதை முறையாக பராமரிக்க வேண்டும் அதற்கான வழிமுறைகள் பார்க்கலாம்

தூங்கும் முறை

மார்பக பகுதியில் சுருக்கங்கள் இல்லாமல் இருக்க வேண்டு என்றால் பெண்கள் மேல் நோக்கியபடி படுத்து உறங்க வேண்டும். பின் புறமாக கவுந்து அடித்து படுத்தால் இது போன்ற சுருக்கங்கள் மார்பு பகுதியில் ஏற்பட கூடும். மேலும், இது மார்பகத்தில் தொங்க செய்யும்.

கற்றாழை

அவ்வப்போது உங்கள் மார்பகங்களை கற்றாழை ஜெல்லை வைத்து மசாஜ் செய்யுங்கள். இவை வறட்சியை நீக்கி, மிருதுவான சருமத்தை தரும். மேலும், இது போன்ற சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும். இது நல்ல பலன் தரும்.

குளியல் முறை

குளிக்கும் போது மார்பு பகுதியில் நேரடியாக வெந்நீரை ஊற்றுவதை தவிர்க்கவும். இப்படி அதிக வெப்பம் நேரடியாக மார்பு பகுதியில் படுவதால் சுருக்கங்கள் உண்டாகும். எனவே, இனி குளியல் முறையை மாற்றி கொள்ளுங்கள். இது இன்னும் அழகு சேர்க்கும்.

உள்ளாடை

உள்ளாடையை சரியான அளவில் அணியாமல் இருந்தால் மார்பகத்தில் சுருக்கங்கள் உண்டாகும். உங்களின் மார்பக அளவிற்கு ஏற்ற உள்ளாடைகளை அணிவது எல்லா வகையிலும் நல்லது.

உடற்பயிற்சி

உடல் எடையை குறைக்க முற்படும் போது மார்பக பகுதியில் உள்ள தசைகள் சுருங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் புஷ்-அப்ஸ் போன்றவற்றை எடுக்கும் போது குறைந்த அளவில் எடுப்பது நல்லது.

மசாஜ்

அவ்வப்போது மார்பக பகுதியில் கைகளால் மசாஜ் கொடுப்பது நல்லது. ஏனெனில் இரத்த ஓட்டத்தை சீராக மார்ப்பு பகுதியில் எடுத்து செல்வதற்கு இதுவும் வழி செய்யும். மார்பு பகுதியை இலகுவாக்க மசாஜ் சிறந்த வழியாகும்.

சன்ஸ்க்ரீன் லோஷன்

வெளியில் போகும் போது சன்ஸ்க்ரீன் லோஷன் போட்டு கொண்டு செல்வது நல்லது. இது சூரிய ஒளியினால் உண்டாக கூடிய பாதிப்புகளை தடுத்து நிறுத்தும். மார்பக பகுதியில் ஏற்படும் சுருக்கங்களை போக்குவதற்கு இது சிறந்த முறையாகும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்