கருப்பை புற்றுநோய் ஏற்பட இதுவும் ஒரு காரணமாம்!...

Report Print Kavitha in பெண்கள்

பொதுவாக நம்மில் பல பெண்கள் அந்தரங்கப்பகுதி வாசனையுடனும் , அதிக ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துவதற்காக முகத்திற்கு போடும் பவுடர், பேபி பவுடரை பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சமீபத்தில் நடத்திய ஆய்வொன்றில் அவ்வாறு பவுடர் பயன்படுத்துவது கருப்பைப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக அறியப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வை 2,50,000 பெண்களிடம் National Institute of Environmental Health Sciences மற்றும் United States National Institute of Health ஆகியவை இணைந்து நடத்தியதாக ஜாமா (JAMA)என்ற இதழில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த ஆய்வில் போது சமீபகாலமாகவே சில பெண்கள் தங்களது அந்தரங்க இடத்தில் பேபி பவுடர் பயன்படுத்தி கருப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அந்த நிறுவனத்தின் மீது வழக்கும் தொடர்ந்து தொடர்ச்சியான புகார் மற்றும் பாதிப்புகளை முன் வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆய்வில், 39 சதவீதம் பெண்கள் தங்களது அந்தரங்க இடத்தில் பவுடர் பயன்படுத்துவதாகவும், 10 சதவீதம் பேர் மற்ற பொருட்கள் பயன்படுத்துவதாகவும் அதில் 2,50,577 பெண்கள் பவுடர் பயன்படுத்தியதில் புற்றுநோய் அறிகுறி இல்லாததும் அதன் பின்னர் 2,168 பெண்களுக்கு புற்றுநோய் உருவானதும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த கருப்பைப் புற்றுநோய் 70 வயதைத் தொடும்போதுதான் ஆபத்தை அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த ஆய்வின் முடிவில் எதிர்பார்த்த புள்ளி வராததால் கிடைத்திருக்கும் புள்ளிகளின் அடிப்படையில் பவுடர் பயப்படுத்துவதால் புற்றுநோய் உண்டாகும் ஆபத்து மிகக் குறைவு என்று குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமன்றி இனப்பெருக்கப் பாதை ஏற்கனவே பாதிக்கப்பட்டிருப்பின் அந்த இடத்தில் பவுடர் பயன்படுத்தினால் அது நேரடியாக உள்ளே சென்று பாதிக்கப்பட்ட இடத்தில் அரிப்பு மற்றும் தொற்றை உண்டாக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

ஒருவேளை கருப்பையை நீக்கிய மற்றும் ஃபெலோபியன் டியூப் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் பவுடர் பயன்படுத்தினால் பாதிப்பு இருக்காது என்றும் விளக்கமளித்துள்ளது.

ஆய்வின்படி, 'புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு மட்டுமே, கண்டிப்பாக புற்றுநோய் வராது' என்று கூறமுடியாது.

எனினும் அந்தரங்க இடத்தில் பவுடர் பயன்படுத்துவது குறைந்த அளவிலான ஆபத்தைக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு பவுடர் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது என ஆய்வு கூறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்