பொதுவாக பூப்படையும் போது பெண்கள் தங்கள் உறுப்பில் வெள்ளைபடுதலை உணர்வார்கள். அதன் பிறகு சினைப்பையில் இருந்து சினை முட்டை வெளியேறி கருப்பை வரும் நாள், மாதவிடாய் வருவதற்கு முன்பு பின்பு வெள்ளைப்படுதல் ஏற்படுகின்றது.
இது சாதாரணமாக வெள்ளை நிறத்தில் காணப்பட்டால் எவ்வித பிரச்சனையும் ஏற்படுவதில்லை.
ஆனால் இவை அடர்த்தியான நிறம் பழுப்பு வெள்ளை பழுப்பு வெள்ளை பச்சை, சாம்பல்,சிவப்பு கலந்த மஞ்சள் நிறம் போன்ற நிறங்கள் வெளிவந்தால் கண்டிப்பாக தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை உறுதி படுத்தி கொள்ளலாம்.
அந்தவகையில் எந்தெந்த நிறத்தில் அந்த திரவம் இருந்தால் என்ன மாதிரியான தொற்றுகள் பரவும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
அடர்த்தியான நிறம்
வெள்ளைப்படுதலில் அதிக அடர்த்தி இருக்கும் சமயங்களில் உதிரப்போக்கு போன்று கட்டியாகவும் இருக்ககூடும். இது பாலாடைக்கட்டி போன்று இருக்கும்.
வெள்ளையாக இருப்பதால் பலருக்கும் இந்த மாற்றம் தெரிவதில்லை. ஆனால் இவை ஈஸ்ட் மற்றும் காளான் தொற்றால் பெரும்பாலும் உண்டாககூடியது. பிறப்புறுப்பில் இயல்பாக இருக்கும் நுண்ணுயிர்கிருமிகளில் இந்த தொற்று உண்டாகும்.
வெள்ளைப்படுதலில் மட்டும் அறிகுறிகளை காணாமல் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அதிக வலி, பிறப்புறுப்பில் கட்டி, புண் போன்றவை இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
இலேசான மஞ்சள் நிறம்
வெள்ளைப்படுதல் படிப்படியாக வெள்ளை நிறத்திலிருந்து இலேசான மஞ்சள் நிறத்திற்கு மாற்றத்தை உண்டாக்கும்.
இதை கவனியாவிட்டால் மாதவிடாய் கோளாறுகள், கருப்பையில் சில குறைபாடுகளை உண்டாக்கிவிடும்.
பழுப்பு வெள்ளை
பெரும்பாலும் திருமணத்துக்கு பின்பும் கருத்தரிப்பு காலங்களிலும் பெண்கள் உணர்கிறார்கள்.
கர்ப்பிணிபெண்கள் 30% பேர் கர்ப்பக்காலத்தில் இந்த பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் வெள்ளைப்படுதலை கவனிக்கிறார்கள்.
திருமணத்துக்கு பின்பு உறவுக்கு பிறகு இதை சற்று அதிகமாக உணர்கிறார்கள். இது இலேசான துர்நாற்றத்தை அளிக்ககூடியது.
பச்சை, சாம்பல்,சிவப்பு கலந்த மஞ்சள் நிறம் - டிஐவி (Desquamative inflammatory vaginitis)
பெண்களின் மெனோபாஸ் காலங்களிலும் அதற்கு பிந்தைய நிலையிலும் இவை வரக்கூடும். பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் அளவு குறையும் போது பெண் உறுப்பு சிவந்து தடித்து இருக்கும்.
அப்போது வெள்ளைப்படுதல் மஞ்சள், பச்சை நிறங்களில் இருக்கும். பிறப்புறுப்புக்கு வழவழத்தன்மையை அளிக்கும் வெள்ளைப் படுதலில் உண்டாகும் மாற்றத்தால் அதிக வறட்சியை சந்திக்கும்.
எப்போது கவனிக்க வேண்டும்
- இயல்பான நிறத்தில் மணமற்று இருக்கும் வரை அது சாதாரணமானது. நிறங்களில் மஞ்சள் , பச்சை, சிவப்பு கலந்த மஞ்சள், பழுப்பு, அடர்த்தி, கட்டியாக வெளிவருவது போன்றவை கவனியுங்கள்.
- இதனோடு பெண் உறுப்பில் கட்டி, துர்நாற்றம், சிறுநீர் கழிக்கும் போது வலி, எரிச்சல் இருக்கிறதா என்பதையும் கவனியுங்கள். அதோடு துர்நாற்றம் வீசுகிறதா என்பதையும் கவனியுங்கள்.
- இவை எல்லாம் இருந்தாலே கண்டிப்பாக வெள்ளைப் படுதலில் பிரச்சனை. தொற்று உண்டாகியிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.