உங்கள் மாதவிடாய் இந்த நிறத்தில் இருந்தால் கவலை வேண்டாம்! இதற்கான அறிகுறியாக தான் இருக்குமாம்!

Report Print Kavitha in பெண்கள்

ஒவ்வொரு பெண்ணும் பூப்படைந்த காலத்துக்கு பிறகு மாதந்தோறும் 28 நாட்கள் இடைவெளியில் மாதவிடாய் சுழற்சி ஏற்படும்.

மாதவிடாய் சைக்கிள் சுழற்சியின் படி 28 நாட்களுக்குள் வரவேண்டிய மாதவிடாய் 40 முதல் 60 நாட் களுக்கு ஒரு முறை வருவது உண்டு. சில பெண்களுக்கு 90 நாட்களுக்கு ஒரு முறை மாதவிலக்கு வருவதும் உண்டு.

அதிலும் சிலருக்கு மாதவிடாய் இரத்தம் வெவ்வோறு நிறங்களில் வெளிவரும். இதனால் பல பெண்கள் இது நோய்க்கான அறிகுறியாக இருக்கும் என கவலைப்படுதுண்டு.

அந்தவகையில் மாதவிடாய் இரத்தம் என்ன நிறத்தில் வந்தால் எதற்கான அறிகுறியாக இருக்கும் என இங்கு பார்ப்போம்.

அடர் பழுப்பு இரத்த நிறம்

இது பழைய இரத்தத்தை குறிக்கிறது. நீண்ட காலமாக கருப்பையில் சேமிக்கப்பட்ட இந்த இரத்தம், நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு கருப்பையை விட்டு வெளியே வருகிறது.

இந்த வகை உதிரப்போக்கு பொதுவாக அதிகாலை நேரத்தில் காணப்படுகிறது.

சிவப்பு நிறம்

இது புதிய இரத்தத்தைக் குறிக்கின்றது. மேலும், இந்த நிற உதிரம் கருப்பையில் இருந்து உடனடியாக வெளியேறுகின்றது.

இந்த வகை இரத்தம் உதிரப் போக்கு அதிகம் உள்ள நாட்களில் காணப்படும்.

மேலும் இது கருப்பையில் அதிக நேரம் தங்கி கருப்பு நிறத்தை அடையாமல் உடனடியாக வெளியேறி விடுகின்றது.

இளஞ்சிவப்பு அல்லது குருதிநெல்லி நிறம்

இது ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியைக் குறிக்கும். இந்த நிறம் பொதுவாக மாதவிடாய் தொடங்கி 2 வது நாள் காணப்படுகிறது.

காலப்போக்கில், இந்த குருதிநெல்லி நிற உதிரம் ஆழ்ந்த சிவப்பு நிறத்திற்கு மாறி விடும். இது மிகவும் சாதாரண விஷயமாகும்.

கருப்பு அல்லது பழுப்பு நிற வண்ணம்

இது மிகவும் ஆபத்தானது. உங்களுடைய மாதவிடாய் கால உதிரத்தின் நிறம் இவ்வாறு இருந்தால் தயவு செய்து அலட்சியம் செய்துவிடாதீர்கள்.

பழுப்பு அல்லது கருப்பு நிற இரத்தம்

இது கருச்சிதைவு அல்லது கருப்பையில் ஏற்பட்டுள்ள தொற்றைக் குறிக்கிறது.

எனினும், மாதவிடாய் தொடங்கி 4 வது நாளில் கருப்பு நிற உதிரத்துடன் சில சிவப்பு நிற திட்டுக்களை காண நேரிட்டால் கவலை வேண்டாம். ஏனெனில் அது உறைந்த உதிரத்தைக் குறிக்கின்றது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்