வெள்ளைப்படுதல் அடர் பழுப்பு நிறமாக இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?

Report Print Kavitha in பெண்கள்

பெண்கள் அனைவருமே சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் வெள்ளைப்படுதல். இது மாதவிலக்கிற்கு சில நாட்களுக்கு முன் வரும்.

வெள்ளைப்படுதல் அதிகமாக இருந்தால், கிருமித் தொற்று அதிகமாக இருக்கு என்று அர்த்தம் என்று சொல்லப்படுகின்றது.

ஆனால் வெள்ளைபடுதல் அடர் பழுப்பு நிறமாக இருந்தால் அதனை சாதரணாமாக எடுத்துக் கொள்ள கூடாது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் தற்போது வெள்ளைப்படுதல் அடர் பழுப்பு நிறமாக காணப்பட்டால் இதற்கு என்ன அர்த்தம் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

  • மாதவிலக்கு முடியும் நேரத்தில் வந்தால் அது இறந்த ரத்த செல்கள் கலந்து பழுப்பு நிறமாக வெள்ளைப்படுதல் வெளிப்படும்.
  • மாதவிலக்கு ஆரம்பிப்பதற்கு முன் உண்டானால் உங்கள் உடலில் பொரோஜஸ்டிரான் அளவு குறைவாக இருக்கிறது என அர்த்தம்.
  • மாதவிலக்கிற்கு இடைப்பட்ட நாட்களில் வந்தால் உண்டாகியிருக்கலாம் அல்லது ஹார்மோன் பிரச்சனையாக இருக்கலாம்.
  • உங்கள் மாதவிடாய் சீரில்லாமல் இருந்தாலும் பழுப்பு நிற வெள்ளைப்படுதல் நிகழும்.
  • கர்ப்பத்தடை மாத்திரைகள் சாப்பிட்டால் இந்த மாதிரி பிரச்சனை உண்டாகும்.
  • கர்ப்ப வாய் புற்று நோய், கர்ப்பப்பை புற்று நோய் காரணமாகவும் இவ்வாறு பழுப்பு நிற வெள்ளைப்படுதல் நிகழும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்