மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருவதற்கான காரணம் என்ன?

Report Print Kavitha in பெண்கள்

இன்றைய கால பெண்கள் அதிகமாக சந்திக்கக் கூடியதாக பிரச்சினைகளில் ஒன்று ஒரே மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருதல். இதனை Polycystic ovary syndrome அழைக்கப்படுகின்றது.

அப்படி மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருகிறது எனில் அது சாதாரண விஷயமாகக் கருதிவிட முடியாது. ஏனெனில் அதற்கு சில காரணங்களுக்கும் உண்டு.

அவற்றை ஒவ்வொரு பெண்களும் தெரிந்து வைத்து கொள்வதே சிறந்தது. தற்போது மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் வருவதற்கான காரணங்களும் அதன் தீர்வுகளும் என்னவொன்று பார்ப்போம்.

  • நீங்கள் திடீரென உடல் எடை அதிகரித்தாலோ அல்லது உடல் எடையைக் குறைத்தாலோ இந்த பிரச்னை உண்டாகும். ஏனெனில் இந்த திடீர் உடல் மாற்றம் ஹார்மோன்களை நிலைகுலையச் செய்யும். அதனால் இந்த பாதிப்பு உண்டாகும்.

  • ஹார்மோன் சமநிலையின்மைக் காரணமாக கருப்பையில் சிறிய நீர்க்கட்டி உருவாகும். அதன் காரணமாகவும் இரண்டு முறை மாதவிடாய் வருதல், அதிக உதிரப்போக்கு ஏற்படும்.

  • கருத்தடை மாத்திரைகள் சாப்பிட்டாலும் உடல் திடீரென மாதவிடாய் உதிரப்போக்கை உண்டாக்கும்.

  • பாலியல் தொற்று, பூப்படைதல், கருப்பையில் பிரச்னை போன்ற காரணங்களாலும் வரலாம்.

இதை சரி செய்ய என்ன செய்யலாம்?

  • கார்போஹைட்ரேட் உணவு மற்றும் ஜங் ஃபுட்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள் கீரை வகைகள் என சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

  • ஆயுர்வேத பானங்கள் அருந்தலாம். கற்றாழை ஜூஸ், இஞ்சி ஜூஸ் என குடிக்கலாம்.

  • வெல்லம் மற்றும் நல்லெண்ணெய், எள் சாப்பிடுவதும் கருப்பை ஆரோக்கியத்திற்கு நல்லது.

  • மன அழுத்தமும் மாதவிடாய் சுழற்சியில் மாற்றத்தை உண்டாக்கும். எனவே அதை தவிர்க்க யோகா, தியானம் , இனிமையான பாடல்கள் கேட்பது என மனதை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள வேண்டும்.

  • பெண்கள் அதிக அளவில் மது அருந்துதல், புகைப்பிடித்தல் பழக்கத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த பழக்கம் கருப்பையை நேரடியாக பாதிக்கும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்