மாதவிடாய் நாட்களில் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு காரணம் என்ன?

Report Print Kavitha in பெண்கள்

பொதுவாக மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு வயிற்றுவலியை போல் மலச்சிக்கல் பிரச்சினை வருவது சாதாரண நிகழ்வுதான்.

இதற்கு முக்கிய காணரம் இதற்கு ஹார்மோன் பிரச்சனையே ஆகும்.

மலச்சிக்கல் தீவிரமாகவோ , பொருத்துக்கொள்ள முடியாத அளவுக்கு கடினமாக இருந்தால் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுதல் நல்லது.

அந்தவகையில் மாதவிடாய் ஏன் மலச்சிக்கல் ஏற்படுகின்றது? இதனை தடுக்க என்ன செய்யலாம்? என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

ஏன் மலச்சிக்கல் ஏற்படுகின்றது?

மாதவிடாய் வருவதற்கு 2-3 நாட்களுக்கு முன்பிலிருந்தே மலச்சிக்கல் பிரச்னை தொடங்கிவிடும்.

அப்போதிலிருந்தே உடலில் புரோகெஸ்ட்ரோன் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கத் துவங்கும்.

இந்த ஹார்மோன் உற்பத்தி வயிற்றில் செரிமாண ஆற்றலை குறைக்கும். எனவே இதுதான் மலச்சிக்கலுக்குக் காரணமாக இருக்கலாம்.

இதற்கு என்ன சாப்பிடலாம்?

  • மாதவிடாய் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சமயத்திலும் தினசரி உணவுப் பழக்கத்தில் சற்று கூடுதலாக நார்ச்சத்து கொண்ட பழங்கள் , காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

  • ஆப்பில், பீன்ஸ், கீரை வகைகள், தானியங்கள், வாழைப்பழம், கேரட், புரக்கோலி, மக்காசோளம்,சியா விதைகள் போன்ற காய்கறிகளை சாப்பிடலாம்.

  • உணவு மட்டுமன்றி அதிகமாக தண்ணீர் அருந்துங்கள். அதேபோல் எலுமிச்சையை தண்ணீரில் பிழிந்து குடிப்பதும் மலச்சிக்கலுக்கு நல்லது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்