பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போவதற்கான ஏழு காரணங்கள் என்னென்ன தெரியுமா?

Report Print Kavitha in பெண்கள்
976Shares

பொதுவாக ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் சொல்லப்படுகிறது.

சில பெண்களுக்கு இந்த பிரச்சினைகளை எப்படி கையாள வேண்டும் என்பதும் பெண்களுக்கும் தெரிவதில்லை.

நிறைய பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.

இதுவே பின்னாளில் அவர்களுக்கு குழந்தை பேற்றில் மற்றும் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை உண்டு பண்ணி விடுகின்றது.

அந்தவகையில் முதலில் இதுபோன்ற பிரச்சினை வர காரணம் என்ன என்பதை தெரிந்து கொண்டாலே போதும். தற்போது அவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.

  • பெண்கள் சமீப காலமாக அதிகமான உடல் எடை போட்டு இருந்தால் கூட அது உங்க மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும். ஏனெனில் அதிக உடல் எடை உங்க உடற் செயல்பாடுகளை மாற்றுகிறது.

  • நீங்கள் அதிக கவலைப்படுவது அல்லது மன அழுத்தத்தில் இருப்பது கூட உங்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை உண்டாக்கும். இது ஹார்மோன் சமநிலையின்மையை உருவாக்குகிறது. இது இறுதியில் உங்க மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும்.

  • உங்களுக்கு புதியதாக குழந்தை பிறந்து இருக்கிறது என்றாலோ அல்லது உங்க பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுகிறீர்கள் என்றாலோ அதுவும் உங்க மாதவிடாய் சுழற்சியை பாதிக்க வாய்ப்புள்ளது. இது உங்க மாதவிடாயை தள்ளிப் போக வாய்ப்புள்ளது.

  • பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்து வரும் போது உங்க மாதவிடாய் சுழற்சி தாமதப்பட வாய்ப்பு உள்ளது. இது உங்க ஹார்மோன் மற்றும் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கிறது.

  • பெண்கள் உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்) நோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் மாதவிடாய் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

  • சில நேரங்களில் அதிகமான உடற்பயிற்சி மற்றும் வேலைகளில் ஈடுபடுவது கூட மாதவிடாய் சுழற்சியை தாமதப்படுத்துமாம். அதிகப்படியான உடற்பயிற்சி உங்கள் ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. இது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு வழி வகுக்கும்.

  • வயதாகும் போது ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்து உங்க மாதவிடாய் சுழற்சி நிற்க வாய்ப்பு உள்ளது.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்