பெண்களுக்கு திருமணத்திற்கு பின் எடை கூடுவது ஏன் தெரியுமா?

Report Print Kavitha in பெண்கள்

பொதுவாக நம்மில் பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்து காணப்படுவார்.

இதற்கு விஞ்ஞான ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் சில வாழ்க்கை முறை மாற்றங்களுக்கும் இதற்கு காரணமாக அமைகின்றது.

இதனை தெரிந்து வைத்து கொண்டால் ஓரளவு எடை அதிகரிக்கும் பிரச்சினையிலிருந்து தப்பிக்க முடியும்.

அந்தவகையில் தற்போது ஏன் திருமணத்திற்கு பிறகு எடை கூடுகின்றது என பார்ப்போம்.

  • பெரும்பாலான புதுமண தம்பதியர் சாப்பிடும் விஷயத்தை பற்றி கவலைப்படுவதில்லை. அதாவது உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில்லை. அதுவே ஆரம்ப ஆண்டுகளில் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும்.

  • திருமணமான புதிதில் தங்கள் வாழ்நாளில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருப்பார்கள். கணவர் மற்றும் குடும்பத்தினரை ஈர்ப்பதற்காக சமையல் போன்ற பல வழிமுறைகளை செய்வார்கள். புதிய சமையல் குறிப்புகளையும் கையாளுவார். அதுவும் உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.

  • திருமணத்திற்கு முன்பு எதிர்கொண்ட பிரச்சினைகள், மன வருத்தங்கள், துயரங்களுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்துவிடுவார்கள். ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பார்கள். அதிக நேரம் ஓய்வும் எடுப்பார்கள். அதுவும் திருமணத்திற்கு பிறகு எடை அதிகரிப்பதற்கு மற்றொரு பொதுவான காரணமாகும்.

  • தேனிலவு காலம் உடல் பருமன் பிரச்சினைக்கு அடித்தளம் அமைத்துவிடக்கூடியது. ஏனெனில் அன்றாட செயல்பாடுகளை சில காலம் விலக்கி வைக்க வைத்துவிடும். நடைப்பயிற்சி , உடற்பயிற்சி செய்வது, ஜாக்கிங் செய்வது போன்ற உடல் இயக்கத்தை கைவிட்டுவிடுவார்கள். இதன் காரணமாக உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியதாகிவிடும்.

  • திருமணமான உடனேயே தம்பதியர் குழந்தை பெற திட்டமிட்டால், பெண்ணின் உடல் எடை அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

  • கர்ப்ப காலத்தில் காரமான, எண்ணெய்யில் தயாரான உணவு பதார்த்தங்களை சாப்பிடுவதற்கு விரும்புவார்கள். அத்துடன் உணவு கட்டுப்பாட்டை கவனத்தில் கொள்ளாமல் விதவிதமான உணவுகளையும் சாப்பிடுவார்கள். அதுவும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணமாகிவிடும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்