துணி, நாப்கின், மென்ஸ்ரட்ல் கப்ஸ், டேம்பான்ஸ்… எப்படிப் பயன்படுத்துவது? பெண்களே கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

Report Print Kavitha in பெண்கள்
213Shares

பொதுவாக மாதவிடாய் காலங்களில் இப்போதெல்லாம், நாப்கின்களுக்குப் பதிலாக பயன்படுத்துவற்கு புதிதாக பல வரவுகள் சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன.

டம்போன்ஸ், மென்ஸ்ரட்ல் கப்ஸ், துணி நாப்கின், பல்வேறு நறுமண நாப்கின், கெமிக்கல் கலந்த நாப்கின் போன்றவை அதிகமாக இன்றைய காலங்களில் பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

அதிலும் இதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் கூட நம்மில் பல பெண்கள் மாதவிடாய் காலங்களில் இதனை சந்தையில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.

உண்மையில் இதுபோன்ற புதுவரவுகளை நாம் விழிப்புணர்வு இல்லாமல் பயன்படுத்துவது நல்லதல்ல.

பூஞ்சை தோற்று, பாக்டீரியா நோய்த்தொற்று, அரிப்பு, கருப்பை மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கும்.

அந்தவகையில் இவற்றை எப்படி முறையாகப் பயன்படுத்துவது? அதிலிருக்கும் நன்மைகள், பிரச்சினைகள் என்னென்ன என்பதை நாமும் தெரிந்து கொள்வோம்.

டம்போன்ஸ் ( Tampons)

நீளமாக இருக்கும் டேம்பான்ஸை பெண்ணுறுப்பின் உள்ளே செலுத்திப் பொருத்த வேண்டும்.

அதன் அடியில் வெளியே எடுக்க, ஒரு நூலும் பொருத்தப்பட்டிருக்கும். உள்ளே செலுத்தும்போது, சௌகரியமான உணர்வு வரும். அப்படி வந்தால், செட்டில் ஆகிவிட்டது என்று அர்த்தம்.

இதை, மூன்று மணி நேரத்திலிருந்து நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும்.

இல்லையென்றால், உடலிலிருந்து வெளியாகும் ரத்தத்தில், பெண்களின் உடலில் பொதுவாக இருக்கும் ஸ்டெஃப்பிலிக்காக்கஸ் (Staphylococcus aureus) என்ற பாக்டீரியா கலக்கும்.

இதனால், நச்சுத்தன்மை ஏற்பட்டு, டாக்சிக் ஷாக் சின்ரோம் என்கிற நோய் வரலாம். இது, சற்று ஆபத்தான நோய் என்பதால், பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

குறிப்பு - நறுமணமூட்டப்பட்ட டேம்பான்ஸ்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அது, பூஞ்சை மற்றும் பாக்டீரியா நோய்த்தொற்றுக்கு வழிவகுக்கும்.

மென்ஸ்ரட்ல் கப்ஸ் (Menstrual cups)

சிலிக்கானில் செய்யக்கூடியது. மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியது என்பதால், பொருளாதார ரீதியாகப் பயன்படக்கூடியது. 10 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

பிறப்புறுப்பின் உள்ளே செலுத்திவைக்க வேண்டும். எடுக்கும்போது, அழுத்தி அதிலிருக்கும் ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். பிறகு, சரியான முறையில் கழுவி மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

இதனை சரியாகப் பொருத்துவது குறித்தும் அறிந்துகொள்ள வேண்டும். அதேபோல, வெளியே செல்லுபோது அதனை வெளியே எடுத்து, கழுவுவது கடினமானதாக இருக்கலாம். அதிலிருக்கும் ரத்தத்தை வெளியே அழுத்தி எடுப்பதை சில பெண்கள் விரும்ப மாட்டார்கள்.

குறிப்பு - கருத்தடை சாதனம் வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நாப்கின்கள்

நாப்கின்களை ஆறு மணி நேரத்துக்கு ஒருமுறை அவசியம் மாற்ற வேண்டும். மாற்றாமல் இருக்கும்போது, அந்த ஈரத்தன்மையில் காரணமாக பூஞ்சைத்தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, அரிப்பும் ரேஷஸும் வரலாம்.

நாப்கின்களை வெள்ளையாக்க, பிளிச்சிங் குளோரின் பவுடர் பயன்படுத்தப்படுவதால், அதனை வெகு நேரம் ஈரத்தன்மையுடன் வைத்திருப்பது, நச்சு வெளியேறும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

நீண்ட காலங்களுக்கு இதையே செய்யும்போது கருப்பை மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. பெண்ணுறுப்பிலும் தொற்று வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

குறிப்பு - சிந்தட்டிக், பிளாஸ்டிக் நாப்கின்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

துணி நாப்கின்

துணி நாப்கின்கின் மீண்டும் பயன்படுத்தக்கூடியது என்பதால், ஒழுங்காகச் சுத்தப்படுத்த வேண்டும்.

கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய சுகாதார விஷயங்கள்:

  • எது உங்கள் உடலுக்குச் சரியாகப் பொருந்தும் என்பதைச் சரியாக அறிந்து முடிவுசெய்ய வேண்டும்.

  • இரண்டு பேடுகளை வைப்பது தவறு. அது, காற்றுச் சுழற்சியைத் தடுக்கும். தொற்றும் வரலாம்.

  • இந்த நான்கு வகைகளையும் மாற்றி மாற்றி பயன்படுத்தக் கூடாது. நாப்கின் என்றால், நாப்கினை மட்டுமே பயன்படுத்த வேண்டும். டேம்பான்ஸ் வைத்துக்கொண்ட சிலர், நாப்கினையும் வைத்துக்கொள்வார்கள். அதனைத் தவிர்க்க வேண்டும்.

  • அரிப்போ அல்லது எரிச்சலோ இருக்கும்போது, ஆண்டிசெப்டிக் க்ரீம் அல்லது பவுடர்களைப் பயன்படுத்தலாம்.

  • வெஜைனல் நறுமண ஸ்ப்ரேகளைப் பயன்படுத்தக் கூடாது.

  • மிதமான சூட்டில் இருக்கும் நீரில், பெண்ணுறுப்பைக் கழுவ வேண்டும். உடலைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்