அகதிகளை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்து! 17 பேர் பரிதாபமாக பலி

Report Print Murali Murali in உலகம்

துருக்கியின் கிழக்கு பகுதியில் ஈரான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள வான் மாகாணத்தில் இடம்பெற்ற விபத்தில் 17 அகதிகள் உயிரிழந்துள்ளனர்.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் துருக்கி சென்று, அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.

இந்நிலையில், துருக்கியின் கிழக்கு பகுதியில் ஈரான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள வான் மாகாணத்தில் இருந்து 40க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளாகியது. இதில் 17 அகதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக” அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்