2016ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் இவர்கள் தான்!

Report Print Printha in உலகம்

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் போன்ற துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம்.

அதே போல இந்த ஆண்டு 2016க்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

2016 ஆம் ஆண்டு வேதியியல் மூலக்கூறுகள் பற்றிய கண்டுபிடிப்புக்கான இந்த பரிசு நோபல் பரிசை பிரான்ஸ் விஞ்ஞானி ஜீன் பியர் சாவேஜ், ஸ்காட்லாந்து விஞ்ஞானி பிரேசர் மற்றும் நெதர்லாந்து விஞ்ஞானி பெர்னாட் பெரிங்கா ஆகியோர்கள் பெறுவார்கள் என்று நோபல் பரிசுக்குழு அறிவித்துள்ளது.

மேலும் 7-ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 10-ம் தேதி பொருளாதாரத்துக்கான நோபல் பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments