புலம்பெயர்ந்தோர் பட்டியலில் இந்த நாடு தான் முதலிடமாம்!

Report Print Raju Raju in உலகம்

தங்கள் சொந்த நாட்டிலிருந்து பல்வேறு விடயங்களுக்காக வேறு நாட்டிற்கு புலம்பெயர்தோர் பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.

அமெரிக்கா நாட்டின் பிரபல ஆய்வு நிறுவனமான பேவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பல்வேறு விடயங்களுக்காக தங்கள் சொந்த நாட்டிலிருந்து வெவ்வேறு நாட்டிற்கு 1.56 கோடி இந்தியர்கள் புலம்பெயர்ந்துள்ளனர்.

இதில் அதிகபட்ச இந்தியர்கள் ஐக்கிய அரசு எமிரேட்சில் வசிப்பதாகவும், பலர் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புலம்பெயர்ப்பு பட்டியலில் இரண்டாவது இடத்தில் 1.23 கோடி எண்ணிக்கையுடன் மெக்சிகோ உள்ளது.

ரஷ்யா 1.06 கோடியுடன், மூன்றாவது இடத்திலும், 95 லட்சம் பேருடன் சீனா நான்காவது இடத்திலும், 72 லட்சம் பேருடன் வங்கதேசம் ஐந்தாவது இடத்திலும் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments