சவுதி மீது தாக்குதல் எதிரொலி.. ஒரே நாளில் தலைகீழாக மாறிய எண்ணெய் சந்தை: பீதியில் உலக நாடுகள்

Report Print Basu in உலகம்

சவுதியில் எண்ணெய் நிறுவனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் எதிரொலியாக உலகின் சிறந்த எண்ணெய் உற்பத்தியாளரின் உற்பத்தியை பாதியாகக் குறைந்துள்ளது.

சமீபத்தில் சவுதி அரேபியாவில் உள்ள இரண்டு Aramco எண்ணெய் நிறுவனங்கள் மீது டரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுத்தி போராளிகள் குழு பொறுப்பேற்றது.

இந்த தாக்குதலின் எதிரெலியாக, எண்ணெய் விலை 10 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது, மேலும், எண்ணெய் உற்பத்தியை பாதியாக ஆதாவது, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 5 சதவீதத்திற்கும் அதிகமாக குறைத்துள்ளது.

தாக்குதலை தொடர்ந்து West Texas Intermediate 10.68 சதவீதம் உயர்ந்து 60.71 டாலராகவும், Brent 11.77 சதவீதம் உயர்ந்து 67.31 டாலராகவும் அதிகரித்துள்ளது.

திங்களன்று ஒரு கட்டத்தில் ப்ரெண்ட் கிட்டத்தட்ட 20 சதவிகிதம் சரிந்தது, அதே நேரத்தில் WTI 15 சதவிகிதம் சரிந்தது.

மத்திய கிழக்கில் பதட்டங்கள் விரைவாக அதிகரித்து வருகின்றன, அதாவது இன்று காலை எண்ணெய் சந்தைகளில் பீதி ஏற்பட்ட பின்னரும் இந்த நிலை எதிர்வரும் வாரங்களில் தொடர்ந்து எதிரொலிக்கும் என்று OANDA-வின் மூத்த சந்தை ஆய்வாளர் Jeffrey Halley கூறினார்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்