கொரோனா தொற்றால் வெள்ளையர்களை விட அதிக அளவில் உயிரிழக்கும் கறுப்பினத்தவர்கள்: அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவு

Report Print Karthi in உலகம்

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கக்கூடிய நிலையில், தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 11 லட்சத்தினை கடந்துள்ளது. இந்நிலையில், தொற்றால் வெள்ளையர்களை விட கறுப்பினத்தவர்களே அதிகம் உயிரிழப்பதாக வெளிவந்துள்ள ஆய்வு முடிவுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

பிரித்தானியாவை தளமாக கொண்டு செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகளின்படி, தொற்றால் பாதிக்கப்பட்ட வெள்ளை இனக்குழுக்களின் உயிரிழப்பு விகிதம் 1,00,000க்கு 106.8 என்கிற அளவிலும், கறுப்பின மக்களிடத்தில் இந்த விகிதம் 1,00,000க்கு 250க்கும் அதிகமாக உள்ளது.

Image credit: Getty

மார்ச் 2 முதல் ஜூலை 28 வரை நிகழ்ந்த மரணங்களை உள்ளடக்கிய தரவு, கருப்பு கரீபியன் இனப் பெண்கள் வெள்ளை பெண்களை விட இரு மடங்கு அதிக அளவில் உயிரிழந்துள்ளதை தெளிவுபடுத்தியுள்ளது. கருப்பு கரீபியன் இனப் பின்னணியின் பெண்கள் 1,00,000 க்கு 128.8 இறப்புகளில் விகிதத்தைக் கொண்டிருந்தனர். இது வெள்ளை, இந்திய, கலப்பு மற்றும் சீன இனப் பின்னணியைக் காட்டிலும் அதிகமாகும்.

வெள்ளை இன பெண்களின் உயிரிழப்பு விகிதமானது 1,00,000க்கு 65.7 என்கிற அளவில் உள்ளது.

இதன் காரணமாக கருப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் வயதானவர்களை தடுப்பூசி சோதனைகளில் பதிவு செய்யுமாறு வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.

Image credit: Getty

தற்போது NHS தடுப்பூசி பதிவேட்டில் உள்ள 2,70,000 தன்னார்வலர்களில் 11,000 பேர் மட்டுமே ஆசிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அதே நேரத்தில் கருப்பு, ஆப்பிரிக்க மற்றும் கரீபியன் பின்னணியைச் சேர்ந்தவர்கள் வெறும் 1,200 பேர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்