பிளவுபட்டுள்ள நமது உலகம் கொரோனா தொற்றை தடுக்க தவறிவிட்டது: ஐ.நா பொதுச் செயலாளர்

Report Print Karthi in உலகம்
49Shares

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது கடந்த 24 மணி நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 4,00,000ஐ கடந்துள்ளது.

ஐரோப்பா முழுவதும் தொற்றை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளும் ஊரடங்கு விதிமுறைகளும் அமல்படுத்தப்படக்கூடிய நிலையில், அமெரிக்கா தொற்று பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்றது.

image credit: Dailymail

இந்நிலையில், பிளவுபட்டுள்ள நமது உலகமானது கொரோனா தொற்றை தடுக்க தவறிவிட்டது என்று ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குடரெஸ் கூறியுள்ளார். மேலும், லட்சக்கணக்கான மக்களை பசியிலிருந்தும், தொற்று பாதிப்பிலிருந்தும் காப்பாற்ற ஒருங்கிணைந்த முயற்சி அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொற்றானது, ஐ.நா பொது செயலாளராக உள்ள எனக்கும், பலதரப்பு மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் மிகப்பெரிய சவாலாக உள்ளதாகவும், துரதிர்ஷ்டவசமாக இது ஒரு சோதனை, இதுவரை சர்வதேச சமூகம் இதில் தோல்வியடைந்து வருகிறது என்றும் அவர் போர்த்துகல் நாட்டு செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா தொற்று பாதிப்பில் உலக அளவில் முதல் இடத்தில் உள்ளதால் பொருளாதாரத்தினை மீட்க ஊக்கத்தொகையை கோரியுள்ளாது.

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா74 லட்சம் கொரோனா பாதிப்புகளுடன் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்