உலகிற்கு நம்பிக்கையளிக்கும் கொரோன தடுப்பூசி மருந்து தயாரிப்பு காணொளி!

Report Print Karthi in உலகம்

சர்வதேச அளவில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது முன்னெப்போதும் இல்லாத அளவில் சனிக்கிழமையன்று 4,00,000ஐ கடந்தது. இந்நிலையில் ஒட்டுமொத்த பாதிப்பானது 4 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

இதனைத் தொடர்ந்து தடுப்பூசிக்கான தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இச்சூழலில் கோவிட் தடுப்பூசிகள் ஆயிரக்கணக்கான சிறிய பாட்டில்களில் ஃபைசர் நிறுவனம் உற்பத்தி செய்யும் காட்சிகள் தற்போது வெளியாகி புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளன.

சர்வதேச அளவில் 11 லட்சத்திற்கும் அதிகமான மக்களை பலிவாங்கியுள்ள நிலையில், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனெகா இணைந்து தயாரித்து வருகின்ற கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியின் இறுதி கட்ட பரிசோதனை பெற்றி பெறுமாயின், ஃபைசர் நிறுவனம் இந்த மருந்துகளை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்து உயிரிழப்புகளை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டு 100 மில்லியன் டோஸ்கள் கிடைக்க வேண்டும் என்று ஃபைசர் நம்புகிறது, அதில் 40 மில்லியன் இங்கிலாந்துக்கு வழங்கப்படும்.

உற்பத்தி வரிசையில் இருந்து முதல் குப்பியைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என இன்று தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ஃபைசர் நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாளர் பென் ஆஸ்போர்ன் கூறியுள்ளார்.

ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் ஃபைசர், தற்போது 44,000 பேர் மீது ஒரு சோதனையை நடத்தி வருகிறது.

தடுப்பூசிக்கு அமெரிக்காவின் அவசர ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் கூறியது.

அஸ்ட்ரா ஜெனெகாவால் தயாரிக்கப்படும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட தடுப்பூசியின் மூன்று கட்ட சோதனைகள் டிசம்பரில் வெளியிடப்படலாம் என்று இங்கிலாந்தின் துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜொனாதன் வான்-டாம் கடந்த வாரம் எம்.பி.க்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்