பொது நிகழ்ச்சிகளை தடை செய்வதன் மூலம் கொரோனா தொற்று பரவலை 24 சதவிகிதம் வரை குறைக்க முடியும்!

Report Print Karthi in உலகம்
40Shares

பொது நிகழ்வுகளை தடை செய்ததன் மூலமாக கொரோனா தொற்று பரவல் 24 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4 கோடியை கடந்துள்ள நிலையில் பொது நிகழ்ச்சிகளை தடை செய்ததன் மூலமாக கொரோனா தொற்று பரவல் 24 சதவிகிதம் வரை குறைக்க முடியும் என லண்டணைத் தளமாகக் கொண்ட லான்செட் என்கிற அறிவியல் ஆய்வு இதழ் தெரிவித்துள்ளது.

131 நாடுகளின் தகவல்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கல்வி நிறுவனங்கள் மூடல், வீட்டிலிருந்து வேலை, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு அதிகமானவர்கள் பொது இடங்களில் கூடுவதை தடுப்பது, போன்ற நடவடிக்கைகள் தொற்று பரவலை 24 சதவிகிதம் வரை குறைக்க உதவியுள்ளதாக தெரிவித்துள்ளது.

தனித்தனியாக இது போன்ற கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதைக் காட்டிலும், ஒரு பெருங் கூட்டத்திற்கு அல்லது, ஒட்டு மொத்தமாக மாகாண அளவில் விதிக்கப்படுகின்ற கட்டுப்பாடுகள் தொற்றை மிகச் துல்லியமாக கட்டுப்படுத்துகின்றது என இந்த இதழ் தெரிவித்துள்ளது.

தற்போது உலகம் முழுவதும் 4.34 கோடிக்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். இதுவரை 2.91 கோடிக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். 1.31 கோடிக்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல 11,59,371 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்