நெதர்லாந்தில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல்: தேடுதல் வேட்டையில் பொலிசார்

Report Print Fathima Fathima in உலகம்
56Shares

நெதர்லாந்தின் The Hague நகரில் உள்ள கடை ஒன்றில் மர்ம நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

உள்ளூர் நேரப்படி இன்று மதியம் The Hague நகரில் உள்ள கடை ஒன்றில் மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தி வருவதாக பொலிசுக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனடியாக அதிகாரிகள் விரைந்து வருவதற்குள், மர்ம நபர் தப்பிச்சென்றுள்ளதாகவும், இத்தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அதே கடையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தெரிகிறது, குற்றவாளி மிக உயரமாக, கருப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குற்றவாளியை வலைவீசி தேடி வரும் பொலிசார், தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்