நியூசிலாந்தை தொடர்ந்து அவுஸ்திரேலியாவிலும் புத்தாண்டு பிறந்தது

Report Print Fathima Fathima in உலகம்
91Shares

உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் 2021ம் ஆண்டு பிறந்தது.

இந்திய நேரப்படி 4.20 மணியளவில் ஆக்லாந்தில் புத்தாண்டை மக்கள் வாணவேடிக்கையுடன் மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடினர்.

இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சாலைகளில் பொதுமக்கள் ஆடல், பாடல் என முழக்கங்களையிட்டு உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தற்போது அவுஸ்திரேலியாவிலும் பிறந்த புத்தாண்டை பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கட்டடங்களுக்கு மத்தியில் சாலைகளில் குவிந்த மக்கள் உற்சாகமாக முழக்கமிட்டு புத்தாண்டை வரவேற்றனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வான வேடிக்கைகள் கண்களைக் கவரும் வகையில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்