பாகிஸ்தானில் 17 இந்திய மீனவர்கள் கைது

Report Print Kalaiyarasi Kalaiyarasi in உலகம்

அரபுக் கடலில் பாகிஸ்தான் எல்லைக்குட்பட்ட பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்களை இன்று பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களுக்கு சொந்தமான 3 படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டின் கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை முடிந்ததும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

பாகிஸ்தான் அரசு நல்லெண்ண அடிப்படையில், கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி 145 இந்திய மீனவர்களை விடுவித்த நிலையில், இன்று மீண்டும் அந்நாட்டு அரசு இந்திய மீனவர்களை சிறைபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்