ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.3 ஆகப் பதிவு!

Report Print Kavery in உலகம்

ஜப்பானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகியுள்ளது.

ஜப்பானின் ஹொக்கைடோ பிரதேச பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவானது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலநடுக்கமானது ஜப்பானில், ஒரு அட்சரேகைக்கு வடக்கே 42,6 டிகிரியிலும் தெற்கே 142.0 டிகிரியிலும் 30 கி.மீ.ஆழத்தில் நிலைகொண்டுள்ளது என்று வானியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி இதுவரை வரை எந்த தகவலும் இல்லை.

இந்தோனேசியாவில் சுலாவேசி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், சும்பா தீவில் பயங்கர பூகம்பம், சுனாமியில் 1400 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று அதிகாலை ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்