ஜேர்மனியில் மீண்டும் ஒரு கத்திக்குத்து சம்பவம்... இரண்டுபேர் பலி, பலர் காயம்
ஜேர்மன் ரயில் ஒன்றில் திடீரென ஒருவர் கத்தியால் பொதுமக்களைக் குத்தியதில் இரண்டுபேர் பலியானார்கள், பலர் காயமடைந்துள்ளார்கள்.
ஓடும் ரயிலில் கத்தியால் தாக்குதல் நடத்திய நபர்
நேற்று ஜேர்மனியின் Hamburg நகரிலிருந்து Kiel நகருக்கு சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்றில், திடீரென ஒருவர் பொதுமக்களைக் கத்தியால் தாக்கத் துவங்கியுள்ளார்.
பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த திடீர் தாக்குதலில் இரண்டுபேர் பலியானார்கள், ஐந்து பேர் வரை காயமடைந்துள்ளார்கள்.
image - Reuters
தாக்குதல்தாரி கைது
இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாக்குதல் நடந்த சிறிது நேரத்துக்குள்ளேயே தாக்குதல்தாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை Brokstedt என்ற இடத்திலுள்ள ரயில் நிலையத்தில் பொலிசார் காவலில் அடைத்துள்ளனர்.
சமீப காலமாக ஜேர்மனியில் இதுபோல பல கத்திக்குத்து சம்பவங்கள் நடந்துவருகின்றன. அவற்றில் சில தீவிரவாத நோக்கம் கொண்டவை, சில மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள். ஆனால், இந்த தாக்குதலின் நோக்கம் இதுவரை தெரியவரவில்லை.