பிரித்தானியாவில் விமான நிறுவனமொன்றில் 1,000 பேருக்கு வேலை: முன் அனுபவம் தேவையில்லை
பிரித்தானியாவின் easyJet விமான நிறுவனம், 1,000 விமானிகளை பணிக்கமர்த்த உள்ளது.
1,000 பேருக்கு வேலை
Image: PA
லண்டன் Gatwickஐ மையமாகக் கொண்ட easyJet விமான நிறுவனம், 1,000 புதிய விமானிகளுக்கு வேலை அளிக்க உள்ளது. விமான நிறுவனமே விமானி பயிற்சி அளிக்க உள்ளதால், முன் அனுபவம் இல்லாதவர்களும் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்னொரு முக்கிய விடயம், easyJet நிறுவனம், பெண் விமானிகளின் எண்ணிக்கையை உயர்த்த விரும்புகிறதாம். உலகம் முழுவதும் மொத்தம் 6 சதவிகிதம் அளவுக்குத்தான் பெண் விமானிகள் இருப்பதாகத் தெரிவிக்கும் அந்நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் விமானிகளில் 7.5 சதவிகிதத்தினர் பெண்கள் என்று கூறியுள்ளது. ஆக, தகுதியும் விருப்பமும் உடையோர் விமானி பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
Image: 2022 Getty Images)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |